பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி ரெய்டு; கணக்கில் வராத ரூ.53,500 ரொக்கம் பறிமுதல்; தெறித்து ஓடிய புரோக்கர்கள்

Sep 25, 2025 - 11:41
 0  48
பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி ரெய்டு; கணக்கில் வராத ரூ.53,500 ரொக்கம் பறிமுதல்; தெறித்து ஓடிய புரோக்கர்கள்

பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி ரெய்டு; கணக்கில் வராத ரூ.53,500 ரொக்கம் பறிமுதல்;
தெறித்து ஓடிய புரோக்கர்கள்


    திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பத்திரப்பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
   கடந்த சில மாதங்களாக இங்கு வழக்கமாக மேற்க்கொள்ளப்படும் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்டப் பணிகளுக்காக லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.
     அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் திடீரென அந்த அலுவலகத்தில் அதிரடி நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு1 ஆம் எண் இணை சார்பதிவாளர் அப்துல்காதர் என்பவர் பணியில் இருந்தார். இவரது நேர்முக உதவியாளரான அறிவழகன் என்பவரிடமிருந்து கணக்கில் வராத சுமார் ரூ.53,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
   அந்த பணம் எப்படி அங்கு வந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையால் இணைப்பதிவாளர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
   பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நுழைந்ததையறிந்த தகவலை கேள்விப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்களாக செயல்பட்டு வந்த 5-க்கும் மேற்பட்டோர் அவர்களது வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு அலுவலகத்தை விட்டு தெறித்து ஓடினர். 
    பின்னர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.மணிகண்டன் இணை சார்பதிவாளர் அப்துல் காதர் மற்றும் அலுவலக உதவியாளர் அறிவழகன் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு கணக்கில் வராத பணம் ரூ.53,500-ஐ பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

   பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை திருச்சி மாவட்டம் எங்கும் எதிரொலித்ததால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் பரபரப்புடன், பதற்றத்துடனேயே காணப்பட்டனர்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0