விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் இனி தப்பிக்க முடியாது: அதி நவீன கேமரா இயக்கத்தை துவக்கி வைத்த கமிஷனர்

Sep 17, 2025 - 07:34
 0  18
விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் இனி தப்பிக்க முடியாது: அதி நவீன கேமரா இயக்கத்தை துவக்கி வைத்த கமிஷனர்

விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் இனி தப்பிக்க முடியாது: அதி நவீன கேமரா இயக்கத்தை துவக்கி வைத்த கமிஷனர்

திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மற்றும் 3 நபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களை கண்டறிந்து, அவர்களை துல்லியமாக தானாக படம் பிடித்து தானியங்கி வாகன எண் அடையாளம் காணும் தொழில்நுட்ப கேமரா மூலம் (Automatic Number Plate Recognition) வழக்கு பதிவு செய்யும் விதமாக புதிய 4 அதிநவீன உயரக கேமராக்கள் மன்னார்புரம் சந்திப்பில் பொருத்தப்பட்டும், அதனை இன்று முதல் செயல்படுத்தும் வகையில் இன்று(16.09.2025)-ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தொடங்கி வைத்தார். 
திருச்சி மாநகரில் ஏற்கனவே 29 அதிநவீன உயரக கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0