மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மதிமுக- பேரறிஞர் அண்ணா 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு திருச்சி சென்னை சாலையில் உள்ள சிறுகனூரில் இன்று மாலை துவங்கியது.
இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஆனால் விவசாயிகள் வீரமுடன் போராட்ட களத்தில் உறுதியாக நின்றனர்.
700 விவசாயிகள் தங்கள் உயிரினை தந்தார்கள்.
உச்ச நீதிமன்றம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண குழு ஒன்றை அமைத்தும், விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக மூன்று சட்டங்களையும் கைவிடுவதாகவும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி கொடுத்த பின்னரே, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது
ஆனால் ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.
1. குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) சரியான முறையில் தீர்மானித்து, அதை சட்டபூர்வமாக்குவது.
2. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது.
3. வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது.
4. போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது.
5. போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவது.
6. உலக வர்த்தக அமைப்பின் நிர்ப்பந்தங்களில் இருந்து வெளியேறுவது.
விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளில் மிகவும் முக்கியமான கோரிக்கை, குறைந்தபட்ச ஆதார விலையைத் தீர்மானிப்பதும், அதற்கு சட்டபூர்வ உத்தரவாதமும்தான்.
குறைந்தபட்ச ஆதார விலை ஆளுஞ, நிர்ணயம் செய்வதில் எப்படி விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறதோ, அதைப் போலவே பயிர் காப்பீட்டு திட்டத்திலும் விதிமுறைகளை கடுமையாக்கி விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கிறது.
பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியே தான் பணம் செலுத்துகின்றனர். ஆனால், மழையால் பயிர்கள் சேதமடையும் போது, ஒட்டுமொத்த வருவாய் கிராமமும் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என விதிமுறை இருப்பது எந்த வகையில் நியாயமாகும்?
அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான பயிர் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இப்படி இருக்கையில், தனிநபர் பயிர் காப்பீடு ஒன்றே தீர்வு என விவசாயிகள் கருதுகின்றனர்.
ஒன்றிய அரசு விவசாயிகளின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
வன விலங்கான யானை மனித மோதல் தடுக்கவும், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாய சாகுபடி பயிர்கள் அழிவைத் தடுக்கவும், ஒன்றிய அரசு வனவிலங்குகள் சட்டத்தில் தேவையானச் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கழக மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 11:
நம் நாட்டில் பாரம்பரிய முதன்மையான தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத் தொழிலையும், அதை நம்பியுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களையும் காப்பதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.
கைத்தறி நெசவாளர்கள் பெரும்பாலானவர்கள் கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாததால் தனியாரிடம் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் அவல நிலை உள்ளது .
தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெரும்பான்மையான சங்கங்கள் செயல்படாமல் உள்ளன .
அவற்றில் உள்ள உறுப்பினர்கள் தனியாரிடமே சொற்ப ஊதியத்தில் வேலை செய்ய வேண்டி நிலமை உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் ஒருங்கிணைத்து, ஒரு சங்கத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் எந்த ஒரு சங்கத்திலும் வேலை வாய்ப்பு பெற்று தொழில் செய்ய அரசு புதிய விதியை வகுத்திட வேண்டும்.
மேலும் இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாகும் துணிகளை கைத்தறி தயாரிப்பு என நுகர்வோரை ஏமாற்றி விற்பனை செய்யும் ஜவுளி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கைத்தறி நெசவுத் தொழிலை காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்.
மேலும் கதர் கிராம கைத்தொழில் துறை மூலமாக ஆண்டு முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12:
தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை.
1998, 1999ஆம் ஆண்டுகளில், செம்மணிப் படுகொலைப் புதைகுழி உலகத்துக்குத் தெரிந்து பேரரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எவராலும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. சிங்களப் படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொன்று 1998 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி நடந்தது.
கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலத்தில்,,,
“செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல, இன்னும் பலர் - 300 இல் இருந்து 400 வரை - புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்றான்.
அப்போதுதான் அந்தக் கொடுமைகள் முழுமையாக வெளியாகி உலகத்தை அதிர வைத்தன.
1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஹோர்ஸ்ட் அவர்களை சந்தித்து மனு அளித்தார்.
கொசோவோ நாட்டில் அல்பேனிய முஸ்லிம்கள் 80 பேர் கொன்று புதைக்கப்பட்ட புதைக்குழிகளை தோண்டி எடுத்து உண்மையைக் கண்டறிய அமெரிக்காவின் “பிசிசியன் பார் ஹியூமன் ரைட்ஸ்” அமைப்பை அனுப்பியதைப் போல 400 ஈழத் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட செம்மணிப் புதைக் குழியைத் தோண்டி எடுத்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன் முதலில் கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் செம்மணி புதைக்குழியைத் தோண்டி எடுத்து ஆய்வு நடத்த நிபுணர் குழுவை அனுப்பியது. எலும்புக் கூடுகள் அங்கே தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததன. ஆதாரங்கள் வெளியே வந்தன.
கால் நூற்றாண்டு கடந்து விட்ட பின் இப்போது அந்த கிராமத்தில் கட்டிடமொன்று கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது ஏராளமான எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன.
அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு மேலும் தோண்டியபோது, ஒரு தாய் தன் குழந்தையைக் கட்டியணைத்தபடியே மரித்துப் போயிருந்த காட்சி மட்டுமின்றி இன்னும் பல்வேறு நிலைகளில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுக் கொண்டே இருகின்றன.
ஆர்மேனியாவில் ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு அந்நாட்டு ராணுவ வீரர்கள் துணை நின்றார்கள் என்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அதைப் போல ஈழத்திலும் செம்மணி முதற்கொண்டு பல பகுதிகளிலும் இலங்கை இனவெறி அரசு நடத்திய படுகொலைகளை முன்வைத்து இனப்படுகொலை செய்த ராணுவத்தினரையும், அவர்களுக்கு உத்தரவிட்ட இனப்படுகொலை இலங்கை அரசையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச நீதிமன்றம் இப்போதாவது முயற்சிக்க வேண்டும்.
செம்மணி மனிதப் புதைகுழி என்பது 60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த இனப் படுகொலைகளுக்கு தனித் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வாக இருக்க முடியும்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2011, ஜூன் 1 ஆம் நாள் பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரஸ்சல்சில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் முதன் முதலில் வலியுறுத்தியதைப் போல, தமிழ் ஈழம் அமைவதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும். இந்த இலட்சியத்தை நிறைவேற்ற உலகத் தமிழினம் தொடர்ச்சியாக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று கழக மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்டவாறு சிறுகனூரில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0