திருச்சியில் கல்லறைத் திருநாள் உற்சாகம் ; முன்னோர்க்கு அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள் 

Nov 2, 2026 - 16:40
Nov 2, 2026 - 17:22
 0  21
திருச்சியில் கல்லறைத் திருநாள் உற்சாகம் ; முன்னோர்க்கு அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள் 

திருச்சியில் கல்லறைத் திருநாள் உற்சாகம் ; முன்னோர்க்கு அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள் 

கிறிஸ்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். இந்த நாள் கல்லறை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறை திருநாளன்று, கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் இறந்த உறவினர்கள், பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் நண்பர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தப்படுத்தி, வண்ணங்கள் தீட்டி குடும்பத்தோடு சென்று ஜெபம் செய்வது வழக்கம். 

அத்தோடு இறந்த உறவினர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளை அவர்களின் நினைவாக ஏழைகளுக்கு வழங்குவர். மேலும் கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடும் நடைபெறும்.

அந்த வகையில், அனைத்து ஆன்மாக்கள் தினமான கல்லறை திருநாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சியில் அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க ஆலயங்களில், இறந்தோர் நினைவாக சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆலயங்களுக்கு உட்பட்ட கல்லறை தோட்டங்களுக்கு பாதிரியார்கள் சென்று இறந்தவர்களின் கல்லறைகளை புனித நீரால் தெளித்து ஆசீர்வதித்து ஜெபம் செய்தனர்.

திருச்சி மேலப்புதூர் வேர் ஹவுஸ் கல்லறை தோட்டம், பொன்மலைப்பட்டி எஸ்விடி கல்லறைத் தோட்டம், அரியமங்கலம் கல்லறைத் தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தோருக்காக ஜெபம் செய்தனர். திருச்சியில் சில கிறிஸ்தவ பள்ளிகளில் வழக்கத்திற்கு முன்னதாகவே பள்ளிகள் நிறைவுற்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0