விஜய் பயணித்த விமானத்தை ட்ராக் செய்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Sep 28, 2026 - 15:53
 0  44
விஜய் பயணித்த விமானத்தை ட்ராக் செய்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

விஜய் பயணித்த விமானத்தை ட்ராக் செய்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்திருக்கிறார் முதல்வர் விஜய்.

VT-KJR - Embraer Legacy 650 business jet (E35L) என்ற பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்தார் முதல்வர் விஜய். இந்த ஒரு பயணத்துக்கு மட்டும் அவர் 14 லட்சம் ரூபாய் செலவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது அவர் பயணம் செய்த தனி விமானத்தின் மதிப்பு 250 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. முக்கியமாக விஜய் பயணம் செய்ததை சுமார் 3910 பேர் லைவில் டிராக் செய்து இருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து மதுரை செல்லும் வரை இந்த விமானத்தை அதிகபட்சமாக 3910 பேர் ப்லைட் ராடார் என்ற ஒரே ஒரு வலைதளத்தின் மூலம் ட்ராக் செய்து இருக்கின்றனர். இதை தவிர பல விமான ட்ராக் வலைதளங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 10,000-க்கும் மேற்பட்டோர் அவரது பயணத்தை ட்ராக் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராகி இருக்கிறார் முதல்வர் விஜய். கட்சியின் 2வது மாநில மாநாடு நடைபெற்ற மதுரைக்கு முதல்வராகி முதன்முறையாக வந்திருக்கிறார் என்பதும், குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பும் வெளியானது. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் டென்டரில் பங்கேற்ற நிலையில் பிரபலமான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு பைசாவுக்கு மோதிரத்தை செய்து தர ஒப்புக்கொண்டது.

தொடர்ந்து கல்யாண் ஜூவல்லசும் இந்த டெண்டரில் பங்கு எடுத்தது. 70க்கு 30 என டெண்டர் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது மோதிரங்கள் தயார் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், தாய் சேய் நல மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இந்த திட்டத்தை இன்று மதுரையில் தொடங்கி வைத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0