பாமணி ஆறு கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, காந்தி ஜெயந்தி அன்று கடையடைப்பு போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

Sep 28, 2026 - 15:46
 0  10
பாமணி ஆறு கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, காந்தி ஜெயந்தி அன்று கடையடைப்பு போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

பாமணி ஆறு கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, காந்தி ஜெயந்தி அன்று கடையடைப்பு போராட்டம் - பி.ஆர்.பாண்டியன் 

பாமணி ஆறு கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, காந்தி ஜெயந்தி அன்று முத்துப்பேட்டையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டமும், கடையடைப்பும் நடைபெற உள்ளது என பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி நகரத்தை ஒட்டி ஓடக்கூடிய பாமணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை தமிழ்நாடு அனைத்து விவசாயின் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

பாமணி ஆறு நீடாமங்கலம் அருகே பிரிந்து 60 கிலோ மீட்டர் தூரம் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. 

முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் தொப்பதானவெளியில் உள்ள கதவணை மூலம் கடல் நீர் உட்புகுவதை தடுத்து பாமணி ஆற்று தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை பராமரிக்கின்றனர். மேலும், பெருக வாழ்ந்தான் கதவணையிலும் தேக்கப்படுகிறது.

பெரும் மழை வெள்ளக் காலத்தில் மட்டுமே திறக்கப்பட்டு கடலில் கலக்க வழிவகை செய்யப்படும் செய்யப்படும்.

இங்கு தேக்கப்படுவதின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நிலத்தடி நீர் பராமரிக்கப்பட்டு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி கழிவு நீர் முழுமையும் தற்போது பாமணி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் சேராங்குளம் அணையில் தேக்கப்பட்டு மிகப்பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது,

கழிவு நீர் முழுவதும் தொப்பதானவெளி கதவணையில் தேக்கப்பட்டால் ஒட்டுமொத்த வழியோர கிராமங்களும் மிக பெரும் பேரழிவை சந்திக்க நேரிடும். குடிநீர் அடியோடு அழிந்து போகும். கால்நடைகள் இந்நீரை அருந்துவதால் இறக்கக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவசரகால நடவடிக்கைகளை தமிழக நீர்ப்பாசனத்துறை மேற்கொண்டு கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

மாறாக தமிழக அரசின் நீர் பாசனத்துறை செயலாளர் கழிவுநீர் கலக்க துணை போவதை அனுமதிக்க முடியாது. உடனடியாக தமிழக அரசு உயர் மட்ட குழுவை அனுப்பி கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக மன்னார்குடி நகராட்சி ரூ.240 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் கழிவுநீரை பாமணி ஆற்றில் விடுவிக்க துணை போகக்கூடாது. திட்டத்தை விட மனித உயிர்கள் உயர்வானது என்பதை மாவட்ட நிர்வாகம் மதித்து செயல்பட முன் வர வேண்டும். 

பாமணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வருகிற காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ல் முத்துப்பேட்டையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கும் மிகப்பெரும் ஆர்பாட்டமும்,

முத்துப்பேட்டையில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற உள்ளது. தொடர் போராட்டங்களை தீவிரபடுத்த உள்ளனர்.

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கருத்துக்கேட்பு கூட்டம் என்கிற பெயரில் சம்பந்தப்பட்ட போராட்டக் குழுவிற்கு தகவல் தெரிவிக்காமல் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

இந்த ஆய்வின்போது மன்னார்குடி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் டி.மனோகரன், எம்.தெய்வமணி, முத்துப்பேட்டை ஜெயபிரகாஷ், சேகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0