சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நடப்பாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,665 கோடி மதிப்பிலான கடன் வழங்கி சாதனை - நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணன் தகவல்

Sep 27, 2026 - 17:54
 0  2
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நடப்பாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,665 கோடி மதிப்பிலான கடன் வழங்கி சாதனை - நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணன் தகவல்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நடப்பாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,665 கோடி மதிப்பிலான கடன் வழங்கி சாதனை - நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணன் தகவல்

மன்னார்குடியில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்சின் புதிய கிளை சமீபத்தில் திறக்கப்பட்டது. மேலும் காரைக்கால் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இரண்டு கிளைகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு ;

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் மன்னார்குடியில் தனது புதிய வளர்ந்து வரும் வணிகப் பிரிவு கிளையைத் திறந்துள்ளது. அதன் நிர்வாக இயக்குநர் டி.லட்சுமிநாராயணன் இக்கிளையைத் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் வணிகப் பிரிவு மூலதனக் கடன்கள் மற்றும் மலிவு விலை வீட்டு வசதிக் கடன்களை உள்ளடக்கியதாகும். மேலும், காரைக்கால் மற்றும் திருத்துறைப்பூண்டியிலும் புதிய வளர்ந்து வரும் வணிக கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தற்போது மத்திய தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் போன்ற பெரிய நகரங்களில் இருப்பதோடு மட்டுமல்லாமல் கும்பகோணம், மணப்பாறை, அறந்தாங்கி, புதுக்கோட்டை மற்றும் பட்டுக்கோட்டை போன்ற சிறு நகரங்களில் சுமார் 25 வளர்ந்து வரும் வணிக கிளைகளைக் கொண்டுள்ளது. மத்திய தமிழ்நாட்டில் இப்பிரிவின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையை இந்த ஆண்டில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தி, சுமார் ரூ. 200 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த வாரம், திருநெல்வேலிக்கு அருகிலுள்ள வள்ளியூரில் ஒரு புதிய வளர்ந்து வரும் வணிக கிளையைத் திறந்தது. தமிழகத்தில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் வளர்ந்து வரும் வணிகப் பிரிவின் கீழ் 70-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது.

விரிவாக்கத் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் டி. லட்சுமிநாராயணன் கூறியதாவது, "எங்கள் வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் சிறிய நகரங்கள் எங்கள் வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக உள்ளன. மன்னார்குடி மற்றும் வள்ளியூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய விரிவாக்கமும், காரைக்கால் மற்றும் திருத்துறைப்பூண்டியில் கிளைகளைத் திறப்பதற்கான திட்டங்களும், தமிழ்நாட்டில் உள்ள 'டயர் 3' மற்றும் 'டயர் 4' நகரங்களில் வலுவான இருப்பை உருவாக்குவதையும், சிறிய நகரங்களுக்குள் ஆழமாகச் சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்ட எங்கள் உத்திக்கு ஏற்பவே அமைந்துள்ளன."

தமிழ்நாட்டிற்கு அப்பால், வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் ஆந்திராவிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ள இந்நிறுவனம், இந்த மாதம் அடோனி, யெம்மிங்கநூர் மற்றும் அமலாபுரம் ஆகிய இடங்களில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நடப்பாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,665 கோடி மதிப்பிலான கடன் வழங்கல்களின் மூலம் ரூ. 85 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. முதல் காலாண்டில் நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துக்களின் மதிப்பு 11% அதிகரித்து, 2026 ஜூன் 30 நிலவரப்படி ரூ.20,325 கோடியாக இருந்தது. 

சுந்தரம் ஃபைனான்ஸின் முழு உரிமையுடைய துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், தொழில்முனைவோருக்கு வீட்டுக் கடன்கள், மனைக் கடன்கள், வீட்டு மேம்பாடு மற்றும் விரிவாக்கக் கடன்கள், மலிவு விலை வீட்டுக் கடன்கள், சொத்து மீதான கடன்கள் மற்றும் சிறு தொகைக் கடன்களை வழங்குகிறது எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0