ஆறாத ரணம் தீராத வலி; கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி; முதல்வர் விஜய் உருக்கம் 

Sep 27, 2026 - 14:33
 0  53
ஆறாத ரணம் தீராத வலி; கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி; முதல்வர் விஜய் உருக்கம் 

ஆறாத ரணம் தீராத வலி; கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி; முதல்வர் விஜய் உருக்கம் 

கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களுக்கு பதிலாக எரியும் மெழுகுவர்த்தி படங்கள், அதன் கீழே உயிரிழந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகைக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தவெகவினர் கருப்பு ஆடை அணிந்து வந்து மெழுகுவர்த்தி ஏந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளரும், மாவட்ட அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மேற்கு மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான வி.பி.மதியழகன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.சத்யா, கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கருப்பு ஆடை, கருப்பு வில்லை அணிந்து, எரியும் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலுசாமிபுரம் என்ற இடத்தில் இந்த துயரச்சம்பவம் நடைபெற்றது. கடந்தாண்டு செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டது.

அதன்பின் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இதே நாள் வேதனையான நிகழ்வு நடந்த நாள்; சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம் என சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழக உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி. இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0