அரசு குடியிருப்பில் போதைப்பொருள்கள் பதுக்கிய மத்திய சுங்கத்துறை ஊழியர் கைது; திருச்சியில் பரபரப்பு :

Aug 6, 2026 - 16:29
 0  53
அரசு குடியிருப்பில் போதைப்பொருள்கள் பதுக்கிய மத்திய சுங்கத்துறை ஊழியர் கைது; திருச்சியில் பரபரப்பு :

அரசு குடியிருப்பில் போதைப்பொருள்கள் பதுக்கிய மத்திய சுங்கத்துறை ஊழியர் கைது; திருச்சியில் பரபரப்பு :

திருச்சியில் மத்திய அரசு குடியிருப்பில் போதைப் பொருள்கள் பதிக்கி வைத்திருந்த மத்திய சுங்கத்துறை ஊழியரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு சுங்கத்துறை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி கருமண்டபம் ஓ.பாலம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கன்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதையடுத்து கன்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அந்தப் பகுதியில் உள்ள மத்திய அரசு சுங்கத்துறை குடியிருப்பில் ஊழியர் ராஜா கவுஸ் (வயது 21)என்பவரது வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் சுமார் 30 கிலோ அளவு பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜா கவுசை கைது செய்தனர். அவர் ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்தவர். தற்போது கருமண்டபம் மத்திய அரசு குடியிருப்பில் தங்கி இருந்து சுங்கத்துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் தில்குஸ், இவரும் மத்திய சுங்கத்துறை ஊழியர். இவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்.

திருச்சியில் போதைப்பொருட்கள் பதிக்கி வைத்திருந்த மத்திய அரசின் சுங்கத்துறை ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0