திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது: வண்டலூரில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு, ஏவ வேலு தடுத்து நிறுத்தம் 

Aug 4, 2026 - 12:51
 0  178
திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது: வண்டலூரில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு, ஏவ வேலு தடுத்து நிறுத்தம் 

திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது: வண்டலூரில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு, ஏவ வேலு தடுத்து நிறுத்தம் 

தமிழக எதிர் கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

தமிழக எதிர் கட்சித் தலைவர் இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடந்த விவசாய சங்க போராட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாநகர செயலாளர் மதிவாணன் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு சிதம்பரம் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைதாகி சிறை சென்றனர். திருவெறும்பூரில் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை முன்னாள் எம்எல்ஏ சேகரன் தலைமையில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் த வெக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் கூத்தைப் பார் பேரூர் கழக செயலாளர் தங்கவேல், தலைவர் செல்வராஜ், பெல் தொமுச பொதுச் செயலாளர் தீபன் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களை திருவெறும்பூர் பொறுப்பு டிஎஸ்பி சந்தியா தலைமையில் இன்ஃபெக்டர் யோகரத்தினம் மற்றும் போலீசார் கைது செய்து காட்டூர் பகுதியில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

இதனால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் கொண்டுவரப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார். பின்னர் தஞ்சை முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். இதனிடையே வண்டலூர் அருகே அவரை பின்தொடர்ந்து வந்த ஏவே வேலு, கே என் நேரு வாகனங்களை சாலையில் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0