கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோவின் சகோதரி காலமானார் ; பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோவின் சகோதரி காலமானார் ; பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.இனிகோ இருதயராஜின் மூத்த சகோதரியும், ஏ.மார்ட்டின் சூசைராஜின் மனைவியுமான எஸ்.ஆஞ்சலோ ஆரோக்கியமேரி காலமானார்.
அவரது இறுதி ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் கருமண்டபம், ஜெயநகர் விஸ்தரிப்பு 4வது கிராஸில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆர்சிஎம்சி கல்லறையில் நல்லடக்கமும் நடைபெற்றது.
அம்மையாரின் உடலுக்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் மற்றும் திமுக பிரமுகர்கள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0