செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டும் போலீஸ்
செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டும் போலீஸ்
லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர்களில் மோசடி நடந்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு ;
தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகள், 3,240 மதுக் கூடங்கள் இயங்குகின்றன. 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளின் விற்பனை உயா்ந்தாலும், வருவாய் குறைந்தது. பல்வேறு முறைகேடுகள் காரணமாக இந்த வருவாய் குறைந்ததாகப் புகாா் எழுந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு உத்தரவின்பேரில், தமிழக ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அத்துறையின் அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா்கள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீா்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளா் பாஸ்கா், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பா்கள் ரதேஷ் ராஜ், சண்முகவேல், திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலரும், கரூரைச் சோ்ந்தவருமான மூலனூா் எஸ்.காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் சென்னை, கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், மன்னார்குடி, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் நேற்று காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, அவரது நண்பா்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேபோல், சென்னையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி இன்று மனுத் தாக்கல் செய்தார்.
முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை; டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கும் செந்தில் பாலாஜிக்கும் சம்பந்தமில்லை என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்தது.
ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது; புலன் விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசுத் தரப்பு வாதம் செய்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது.
எதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது? எதனடிப்படையில் முன் ஜாமீன் கோருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.
எனவே, உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், செந்தில் பாலாஜி எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு காவலில் எடுத்து விசாரிக்கப்படலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0