கர்நாடக தமிழக முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை சட்டப்படி செல்லாது- பிஆர்.பாண்டியன்

Jul 26, 2026 - 17:18
 0  34
கர்நாடக தமிழக முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை சட்டப்படி செல்லாது- பிஆர்.பாண்டியன்

கர்நாடக தமிழக முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை சட்டப்படி செல்லாது- பிஆர்.பாண்டியன்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்கனிடம் தெரிவித்ததாவது;

காவிரி டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது சென்றாண்டுதஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

நடப்பாண்டு 2லட்சம் ஏக்கருக்குள்ளாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் ஏக்கர் பாலைவனமாக காட்சி அளிக்கிறது கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஆறுகள் குளம் குட்டைகள் வறண்டு கிடக்கிறது. நிலத்தடி நீர் கீழே சென்று பல கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகளை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்கள் கருகுவதை பார்த்து வேதனை அடைந்து உள்ளனர். எல் நினோ தாக்குதலால் ஏற்பட்ட வறட்சி குறித்து விஞ்ஞானிகளோடு இணைந்து விவசாயிகள் சார்பில் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி திருவாரூரில் வறட்சி மாநாடை நடத்த உள்ளோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

கொள்ளிடம் தெற்கு கரையில் 20 கிலோமீட்டர் தூரம் சாலை மோசமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதனை பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் விரைந்து செப்பனிட வேண்டுகிறோம்.

கொள்ளிடம் மற்றும் உப்பனாற்றில் கடல் நீர் உள்ளே வருவதை தடுப்பதற்கு கதவணைகள் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

காவிரியில் மேகதாட்டு அணை கட்டுமானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமார் தமிழக முதலமைச்சருக்குஅழைப்பு விடுத்திருக்கிறார்அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்று நடத்தும் பேச்சுவார்த்தை செல்லாது. அவ்வாறு நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது. நீதிமன்ற உத்திரவிற்கு முரணானது. அப்படி நடத்தப்படும் பேச்சுவார்த்தையால் எந்த பலனும் அளிக்காது. மாறாக இன கலவரத்தை கர்நாடகாவில் உருவாகும் சூழ்நிலை உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு மத்திய அரசுகளில் வெளியிடப்பட்ட அன்று முதல் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கர்நாடகம் தமிழகத்தில் உள்ள காவிரி ஆறுகள் மற்றும் அணைகளில் உள்ள நீர் நிர்வாக முறைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.எனவே மெகதாட்டு குறித்து தண்ணீர் பங்கிட்டு கொள்வது குறித்தோ சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்கள் பேசுவது சட்டப்படி பயனளிக்காது. 

கர்நாடக விவசாயிகள் மேகதாட்டு அணைக்கு எதிராக இருப்பதால் அங்கு போராட்டம் நடத்தும் வாய்ப்பு இல்லாத நிலையில் கன்னட இன உணர்வாளர்களை தூண்டிவிட்டு கலவரத்தை நடத்தும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் கர்நாடகாவில் தமிழக வாகனங்கள் அனுமதிக்க மறுத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கலவரங்கள் தூண்டப்பட்டு கர்நாடக தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் தஞ்சை மண்டல செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன், கடலூர் மாவட்ட தலைவர் அன்பழகன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0