லால்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும் - காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன்
லால்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும் - காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் தமிழக முதல்வர் சி ஜி ஜோசப் விஜய்க்கு நன்றியும் கோரிக்கையும் வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :-
முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றி அதிரடி உத்தரவு தெரிவித்த தமிழக முதலமைச்சருக்கு பொதுமக்கள் சார்பிலும், காங்கிரஸ் தொண்டர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சி எந்தவித கோரிக்கையை வைக்காமல் தாங்கள் பெரிய மனதுடன் தலைவர் பெயரை சூட்டி உள்ளீர்கள் அதற்கு தொண்டர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், திருச்சி மாவட்டம் லால்குடி பழைய பேருந்து நிலையத்தை கடந்த ஆட்சியில் இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் புள்ளம்பாடி செல்லும் வழியில் புதிதாக கட்டி திறந்து உள்ளார்கள் ஆனால் பழைய பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயர் உள்ளது. அதே பெயரை பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் லால்குடி என மீண்டும் தலைவர் பெயரை சூட்ட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0