தவெக காவல் தெய்வம்: திருச்சியில் கவனம் ஈர்த்த வாழ்த்து பேனர்
தவெக காவல் தெய்வம்: திருச்சியில் கவனம் ஈர்த்த வாழ்த்து பேனர்
தவெக காவல் தெய்வம் கருப்பசாமி அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை வாழ்த்தி கட்சியினர் வைத்துள்ள வாழ்த்து பதாகை பொதுமக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு ;
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி என்.ஆனந்த்க்கு இன்று (ஜூலை 18) பிறந்தநாள்.
இந்த பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்தில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம், கோவில்களில் தங்க தேர் இழுத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள், பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் என கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
அந்த வகையில், திருச்சி மேற்கு தொகுதி தமிழக வெற்றிக்கழக மூத்த வழக்கறிஞர் ஜான் ரஸ்கின் மற்றும் தொழிலதிபர் எம்ஜிஆர் நகர் கே.கே.என். கரிகாலன் ஆகியோர் இணைந்து 10 நாட்களுக்கு ஒரு முறை ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு விளம்பரப் பதாகைகள் வைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் வகையில் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் வைத்துள்ள பேனர்கள் சுவர் விளம்பரங்கள் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அதற்குக் காரணம் அந்த வாழ்த்துப்பதாகையில் அவரை தமிழக வெற்றி கழகத்தின் காவல் தெய்வமாக சித்தரித்து கருப்பு சாமியாக சித்தரித்து வித்தியாசமான முறையில் ஆங்காங்கே பேனர்கள் வைத்துள்ளனர். மேலும் மன்றம் காத்த மாமனி, கட்சி காக்கும் காவல் தெய்வம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கிறது. இது அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளதுடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0