கோவை மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் அமளி; 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
கோவை மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் அமளி; 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் செம்மொழி பூங்காவில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மேயர் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்ததால், காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே மாமன்ற கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 5 கவுன்சிலர்களை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது குறித்த விபரம் வருமாறு ;
கோவை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று நடைபெற்றது..
மேயர் ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவிதேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது,
இது குறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என கூறி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அவருடன் திமுக கவுன்சிலர்களும் ஆணையர் முன்பாக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு செம்மொழி பூங்காவில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றது குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதே வேளையில் அதிமுக 3 பேர் குடிதண்ணீர் வழங்க கோரி காலி குடங்களுடன் தனியாக போராட்டம் நடத்தினர்.
சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சின்ன வேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்கக் கூடாது எனக் கூறி அவர்களும் தனியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்ட அரங்கில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது
காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், திமுக பெண் கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திமுக பெண் கவுன்சிலர்கள் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் கையை பிடித்து இழுத்த நிலையில், அதனை மீறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து கூச்சல் குழப்பம் முடிவுக்கு வராமல் கடும் அமளி ஏற்பட்டதால் மாமன்ற கூட்டத்தை 12 மணி வரை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார்.
மேலும், கோவை மாநகராட்சி கூட்டத்தில் அமளியில் ஈடுபட்ட வார்டு கவுன்சிலர்கள் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி, பூபதி , இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகிய 5 பேரை இரண்டு மாத காலத்துக்கு பணியிடை நீக்கம் செய்து மேயர் ரங்கநாயகி நடவடிக்கை எடுத்தார். மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் வாக்குவாதம் தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0