கோவையில் லால்குடி எம்எல்ஏ  லீமாரோஸ்; குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி மகிழ்ச்சி

Jun 28, 2026 - 19:01
Jun 28, 2026 - 19:01
 0  27
கோவையில் லால்குடி எம்எல்ஏ  லீமாரோஸ்; குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி மகிழ்ச்சி

கோவையில் லால்குடி எம்எல்ஏ  லீமாரோஸ்; குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி மகிழ்ச்சி

கோவை தொண்டாமுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் லீமாரோஸ் கலந்து கொண்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் மற்றும் லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ஆகியோர் போலியோ சொட்டு மருந்தினை பிறந்த குழந்தைகளுக்கு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 

 இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சம்பத் குமார் கூறியதாவது;

கோவை மாவட்டத்தில் நகர்புறங்களில் 491 மையங்களும்,கிராமப்புறங்களில் 1124 மையங்களில் என மொத்தம் 1615 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.ஐந்து வயதுக்கு கீழ் உள்ள 2.94 குழந்தைகள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.

பேருந்து நிலையம்,ரயில் நிலையம், விமான நிலையம் என பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய 32 இடங்களிலும் நடமாடும் போலியோ சொட்டு மருந்து முகாம் 22 இடங்களில் நடைபெற இருக்கிறது என இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் கூறியதாவது;

தமிழக அரசு போலியோ சொட்டு மருந்து முகாமை சிறப்பாக நடத்தி வருவதாகவும் காலை முதலே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து ஆர்வமுடன் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

தொண்டாமுத்தூரில் எம்எல்ஏ எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வாரா என கேள்விக்கு, கண்டிப்பாக கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

 திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட லீமாரோஸ் பெரும்பாலும் மாநில அரசியலிலும், கோவையிலுமே கவனம் செலுத்தி வருவது லால்குடி மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0