திருச்சி: போலீஸ் செக்போஸ்ட் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிப் படுகொலை ; மர்ம நபர்களுக்கு போலீசார்வலை
போலீஸ் செக்போஸ்ட் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிப் படுகொலை ; மர்ம நபர்களுக்கு போலீசார்வலை
திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆயில் மில் செக் போஸ்ட் அருகே பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு;
அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மகபூ பாஷா இவரது மகன் பாதுஷா (24) பிரபல ரவுடி என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்து பாதுஷாவை வெட்டி சாய்த்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பாதுஷா உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு, உடனடியாக திருச்சி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரேவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரவின் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பிறகு பாதுஷாவின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதுஷா கொலை செய்யப்பட்டதற்குரிய காரணம் என்னவென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், பாதுஷா அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் கள்ள தொடர்பில் இருந்ததாகவும், இதனால் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மோதலில் பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் பாதுஷா அந்த பெண்ணிடம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கொலை நடந்திருக்குமோ? என்று சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், கஞ்சா போதை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய பாதுஷாவுக்கும் அரியமங்கலம் ரவுடி கோஷ்டிகளுக்குள்ளும் ஏற்பட்ட மோதலா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் ரோந்து செல்லும் பகுதியாகவும், 24 மணி நேரமும் போலீஸ் அமர்ந்திருக்கும் செக்போஸ்ட் எதிரை உள்ள தெருவில் நடைபெற்ற கொலை சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையுண்ட பாதுஷாவை இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்து மூன்று பேர் தெருவில் வெட்டி கொன்று விட்டு தப்பிச்செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படாதது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0