திண்டிவனம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; விரைவு ரயில்கள் தாமதம்; பயணிகள் அவதி
திண்டிவனம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; விரைவு ரயில்கள் தாமதம்; பயணிகள் அவதி
சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென அந்த ரயிலில் சில பெட்டிகள் தடம்புரண்டதால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது ரயில்வே ஊழியர்கள் தண்டாவளத்தில் இருந்து விலகிய பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை என தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில்கள் பல அப்படியே பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0