திருச்சி மாவட்டத்தில் 119 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி; மாநிலத்தில் 4-ம் இடம் பிடித்த திருச்சி 

May 20, 2026 - 14:11
 0  150
திருச்சி மாவட்டத்தில் 119 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி; மாநிலத்தில் 4-ம் இடம் பிடித்த திருச்சி 

திருச்சி மாவட்டத்தில் 119 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி; மாநிலத்தில் 4-ம் இடம் பிடித்த திருச்சி 

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். அதன்படி 2025-26 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதாவது தமிழ்நாட்டில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 82.11 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே 97.57 % தேர்ச்சி விகிதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது.. 97.54% தேர்ச்சி உடன் சிவகங்கை 2-வது இடத்திலும், 97.41 % தேர்ச்சி உடன் தஞ்சாவூர் 3-வது இடத்திலும் உள்ளது. 97.31% தேர்ச்சி உடன் திருச்சி 4-வது இடத்திலும், 97.30 % தேர்ச்சி உடன் கன்னியாகுமரி 5-வது இடத்திலும் உள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 446 பள்ளிகளில் பயின்ற 16,943 மாணவர்களும், 16,551 மாணவிகளும் ஆக மொத்தம் 33,494 மாணவ/மாணவிகள் தேர்வு எழுதினர்.

16,265 மாணவர்களும் 16,329 மாணவிகளும் ஆக மொத்தம் 32,594 மாணவ/மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

96.00% தேர்ச்சியுடன் மாணவர்களும், 98.66% தேர்ச்சி மாணவிகளும் ஆக மொத்தம் 97.31% சதவீதம் மாணவ/மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம்:

97.31% தர வரிசை: 04 மாவட்ட அளவில் கடந்த ஆண்டைவிட 0.7% தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தரவரிசை 05. அனைத்து பள்ளிகள் விவரம்:

மாணவர்கள் – தேர்வு எழுதியோர்: 16,943, தேர்ச்சி பெற்றோர்: 16,265, தேர்ச்சி சதவீதம்: 96.00% ,மாணவிகள் – தேர்வு எழுதியோர்: 16,551, தேர்ச்சி பெற்றோர்: 16,329, தேர்ச்சி சதவீதம்: 98.66%

மொத்தம் – தேர்வு எழுதியோர்: 33,494, தேர்ச்சி பெற்றோர்: 32,594, தேர்ச்சி சதவீதம்: 97.31%

அரசு பள்ளிகளில் 96.48% தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டைவிட 1.56% தேர்ச்சி உயர்ந்து மாநிலத்தில் 5-வது இடத்தை பெற்றுள்ளது.

அரசு பள்ளிகள் விவரம்:

மாணவர்கள் – தேர்வு எழுதியோர்: 6,679, தேர்ச்சி பெற்றோர்: 6,345, தேர்ச்சி சதவீதம்: 94.99%, மாணவிகள் – தேர்வு எழுதியோர்: 6,488, தேர்ச்சி பெற்றோர்: 6,358, தேர்ச்சி சதவீதம்: 97.99%

மொத்தம் – தேர்வு எழுதியோர்: 13,167, தேர்ச்சி பெற்றோர்: 12,703, தேர்ச்சி சதவீதம்: 96.48%

2025 vs 2026 ஒப்பீடு:

2025 மொத்த தேர்ச்சி: 96.61%

2026 மொத்த தேர்ச்சி: 97.31%

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: மொத்தமுள்ள 446 பள்ளிகளில் 247 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 2ஆம் இடம். மொத்தமுள்ள 224 அரசு பள்ளிகளில் 119 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் உள்ளதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  கிருஷ்ண பிரியா தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0