தஞ்சாவூர்; கார் பனைமரத்தில் மோதி ரவுடி உள்பட இருவர் உயிரிழப்பு: 4 பேர் படுகாயம்
தஞ்சாவூர்; கார் பனைமரத்தில் மோதி ரவுடி உள்பட இருவர் உயிரிழப்பு: 4 பேர் படுகாயம்
தஞ்சாவூர் அருகே பனைமரத்தில் கார் மோதிய விபத்தில் ரவுடி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்த ரத்தினம் மகன் தளபதி (36), திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி. தளபதிக்கு பிறந்த நாள் என்பதால் தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதர்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகிய ஆறுபேரும் ஒரே காரில் திருவையாறுக்கு சென்றுள்ளனர். காரை தமிழரசன் ஓட்டிச் சென்றார். தளபதியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருவையாறில் 6 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பிரபல ரவுடி தளபதி
பின்னர், அதிகாலை 3 மணியளவில் திருவையாறில் இருந்து காரில் தளபதி உட்பட 6 பேரும் அம்மன்பேட்டைக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை தமிழரசன் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில் கண்டியூர் அருகே சுற்று குளத்தான்கரை பகுதியில் கார் வேகமாக வந்தபோது நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியுள்ளது.
இதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறியுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் தளபதி மற்றும் தமிழரசன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மற்ற 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருவையாறு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
1
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0