அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்பி ப.குமார்

Feb 13, 2026 - 21:04
Feb 14, 2026 - 03:19
 0  39
அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்பி  ப.குமார்

அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்பி ப.குமார்

125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து மணப்பாறை வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்பி ப.குமார் ;125 நாள் வேலை உறுதி திட்டத்தை பற்றி அவதூறு பரப்பும் விடியா திமுக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

 நெல் வியாபாரிகளுக்கு விவசாயிகளுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்றனர் வழங்கப்பட்டதா, கரும்புக்கு ரூ.4000 கொடுப்பேன் என்றார்கள் கொடுத்தார்களா, வெறும் 2923 ரூபாய் மட்டுமே வரவு வைக்கப்படுகிறது. வாக்குறுதி 505 இல் சொன்னது போல் பால் விலை குறைந்து இருக்கிறதா? வாக்குறுதி எண் 25 படி தமிழ்நாட்டின் கடன் சுமை குறைக்கப்பட்டு இருக்கிறதா? வாக்குறுதி 83-ன் படி காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் மணப்பாறை தொகுதிக்கு தொடர்புடைய திட்டம் நிறைவேற்றப்பட்டதா? இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாநில அளவில் அல்வா, மாவட்டம் தோறும் அல்வா கிண்டிக்கிட்டு இருக்காரு. கலப்புத் திருமணம் தங்கம் திட்டத்தில் 8 கிராம் தரேன் என்றார் 60 ஆயிரம் ரொக்கம் தரேன் என்றார் யாராவது வாங்கி இருக்கீங்களா என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சேது, வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முருகன், பேராசிரியர் பொன்னுசாமி, எஸ் எஸ் ராவணன், எஸ் எம் பாலன், எஸ்.கே.டி கார்த்திக் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0