டெல்டாவில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளூத்தி போராட்டம்

Feb 15, 2026 - 15:10
 0  20
டெல்டாவில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளூத்தி போராட்டம்

டெல்டாவில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளூத்தி போராட்டம்

   

மத்திய அரசு அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு 18 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்காவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யக்கூடிய பால், சோளம் உள்ளிட்ட வேளாண் உணவுப் பொருட்கள் தமிழகத்தில் வரியில்லாமல் இறக்குமதி செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் அழிவுப்பாதைக்கு செல்ல நேரிடும். மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் சந்தைப்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் தற்கொலைகளுக்கு தள்ளப்படுவார்கள். 
  எனவே, உடனடியாக மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்திய விவசாயிகளுக்கு பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் ஏற்க முடியாது. எனவே, இதனை கண்டிக்கும் வகையிலும், திரும்ப பெற வலியுறுத்தியும் வர்த்தக ஒப்பந்த நகலை இந்தியா முழுமையிலும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் இந்தியா - அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளுத்த வேண்டும் என தேசியக்குழு அறைகூவல் விடுத்தது. அதனை ஏற்று தமிழகத்தில் இன்று அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் ஒப்பந்த நகளை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்கரை கிராமத்தில் விவசாயிகளுக்கு எதிரான இந்தியா - அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை விவசாயிகள் தீயிட்டு கொழுத்தினர். ஒப்பந்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி முழுக்கமிட்டனர். 
   இந்நிகழ்வில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது) தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
   திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமுகுடி, நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பழனிராஜா ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மத்திய அரசின் இந்திய அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டுக் கொளுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0