விஜய் பாணியில் விருதுநகரில் மு.க.ஸ்டாலின் ரேம்ப் வாக்

Feb 7, 2026 - 18:43
Feb 7, 2026 - 22:02
 0  40
விஜய் பாணியில் விருதுநகரில் மு.க.ஸ்டாலின் ரேம்ப் வாக்

விஜய் பாணியில் விருதுநகரில் மு.க.ஸ்டாலின் ரேம்ப் வாக்  

விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு இன்று மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. 

விஜய் பாணியில் விருதுநகரில் திமுக தலைவர் ஸ்டாலின் விழா மேடை முன்பு அமைக்கப்பட்ட மேடையில், ரேம்ப் வாக் சென்று இளைஞர் அணி தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தேர்தலுகாக தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடுகளை நடத்தி வருகிறது திமுக. தென் மண்டலத்தை பொறுத்தவரை அதிமுக பலம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த வெற்றியை அதிமுக வெற்றி பெறமுடியவில்லை. ஆனால் இந்த முறை மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் டிடிவி.தினகரன் இணைந்துள்ளார். ஓபிஎஸ் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இதனால் மீண்டும் தென் மாவட்டங்களில் அதிமுக பலம் வாய்ந்ததாக தன்னை காட்டிக் கொண்டு வருகிறது. 

இதனால் திமுக தென் மாவட்டத்தில் தமது பலத்தை வலிமைப்படுத்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகளை அழைத்து திமுக இளைஞரணி மாநாட்டை இன்று நடத்தியுள்ளது.

கட்சி மற்றும் நிர்வாகிகளை வலிமைப்படுத்தும் வகையில், திமுக சார்பில் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் மிக பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து. கரூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா, திமுக இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதன் மூலம் இளைஞர்களின் கவனத்தை திமுக பக்கம் திருப்பும் முயற்சி என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடக்கு மண்டல மாநாடு திமுக சார்பில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தஞ்சையில் கனிமொழி ஏற்பாட்டில் திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் பெண்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதல்வருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு விஜய் பாணியில் விழா மேடை முன்பு அமைக்கப்பட்ட மேடையில், ரேம்ப் வாக் சென்று இளைஞர் அணி தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தினார்.

பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது புகைப்படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணியினருக்கு வர சட்டமன்றத் தேர்தலில் நிறைய இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற உறுதி மொழியை முதல்வர் முன் வைத்தார்.

மேலும், 200 தொகுதிகளில் திமுக வெல்ல இளைஞர்கள் பணியாற்ற வேண்டும். மக்களை சந்திக்க இளைஞர் அணியினர் திரளாக செல்ல வேண்டும். நமது சாதனைகளை எடுத்துக் கூறி திராவிட மாடல் அரசின் தூதுவர்களாக மக்களிடம் செல்ல வேண்டும். இன்னும் இருக்கக்கூடிய 60 நாட்களில் மக்களை முழுமையாக திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் குடிநீர் பாட்டில், கடலை மிட்டாய், ஜூஸ் பாட்டில் உள்ளிட்ட பொருள்களைக் கொண்ட சிற்றுண்டி பை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி விழா முடிந்து செல்லும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0