தவெக தலைவர் விஜய்யின் சேலம் பொதுக்கூட்டத்தில் ஒருவர் பலி
தவெக தலைவர் விஜய்யின் சேலம் பொதுக்கூட்டத்தில் ஒருவர் பலி
தவெக தலைவர் விஜய்யின் சேலம் பொதுக் கூட்டத்தில் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு ;
ஈரோடு கூட்டத்தை அடுத்து, 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு இன்று வந்திருந்தார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில், பகல் 12 மணிக்கு தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 998 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு 7 இடங்களில் பார்க்கிங் வசதி, கழிவறை, குடிநீர் வசதி, ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செல்ல இரு நுழைவு வாயில்கள், கண்காணிப்பிற்காக 25 சிசிடிவி கேமராக்கள், 15 மருத்துவக்குழுக்கள், 6 மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
250 பேருக்கு ஒரு கேலரி என மொத்தம் 20 கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. கேலரியில் இருந்து 50 மீட்டர் தொலைவில், விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
விஜய்யை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அதேசமயம், மைதானத்தில் நிர்வாகிகள் மட்டுமே இருந்த நிலையில், கூட்டம் பெரிதாக இல்லாததால், வந்திருந்த பொதுமக்களுக்கும் பிறகு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் என்பவர் மயங்கி விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். கடும் வெயிலின் காரணமாக மயங்கி விழுந்தவர், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். உடலை போலீசார் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவரா அல்லது பொதுக்கூட்டத்திற்கான பணிகளை செய்ய வந்த தொழிலாளரா என்பது குறித்து சேலம் மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கரூர் சம்பவத்திற்கு பிறகு சேலம் பிரச்சாரக் கூட்டத்தில் ஒருவர் பலியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0