திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்; பயணிகள் கடும் அவதி

Feb 12, 2026 - 18:58
 0  42
திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்; பயணிகள் கடும் அவதி

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்; பயணிகள் கடும் அவதி

   

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமாக நான்கு புதிய சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், பொது துறையை தனியார் மயம் ஆக்குவதை நிறுத்த வேண்டும், அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த முறையில் பணியில் பணியாளர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும், மோட்டார் தொழிலாளர்களை பாதிக்கும் பி.என்.எஸ்., சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அந்தவகையில், மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து திருச்சியில் 8-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை பேரணியாக சென்றனர்.

  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்த தொழிற்சங்கத்தினர், கையில் கொண்டு வந்த கை மைக்கில், தமிழக காவல்துறையினர் தங்களை தடுத்து நிறுத்தக்கூடாது, எங்களை ரயில் நிலையம் உள்ளே விட அனுமதியுங்கள், இது மத்திய அரசுக்காண போராட்டம், மாநில அரசுக்கான போராட்டம் அல்ல என தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வந்தனர்.

 

இந்தநிலையில் ஜங்சன் ரயில் நிலைய முகப்பில் போராட்டக்காரர்கள் வந்தபோது திருச்சி மாநகர காவல்துறையினர் கோஷம் எழுப்பி திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் கொந்தளித்த போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் தடுப்புகளை கடந்து ரயில் நிலையம் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீஸாருக்கும் தொழிற்சங்கத்தினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட, இருபதுக்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ரயில் நிலையத்தில் தடுப்பு வேலிகளில் மோதி கீழே விழுந்தனர்.

   திருச்சி மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையினரின் கடும் தடுப்புகளையும் கடந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் புகுந்து தொழிற்சங்கத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பியதால் ரயில் பயணம் செல்ல காத்திருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர்.  

  ஜங்சன் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடை தண்டவாளத்தில் அமர்ந்து நூற்றுக்கணக்கானோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், மாநகர காவல் துறையினர் அவர்களை கீழே இறங்க வைத்து மீண்டும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் இன்று காலை முதல் திருச்சி ரயில் நிலையப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த மாநகர காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப்படையினர் என சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களே இருந்தால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.

   இந்த ரயில் மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை சார்ந்த சுமார் 500-பேர் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டனர்.

  திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தால் ரயில் பயணிகள் கடுமையாக பதிக்கப்பட்டனர். குறித்த நேரத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0