திருச்சி ஜீவா நகர் ரயில்வே இருப்பு பாதை பகுதியில் துரை வைகோ எம்பி ஆய்வு

Feb 22, 2026 - 16:50
 0  10
திருச்சி ஜீவா நகர் ரயில்வே இருப்பு பாதை பகுதியில் துரை வைகோ எம்பி ஆய்வு

திருச்சி ஜீவா நகர் ரயில்வே இருப்பு பாதை பகுதியில் துரை வைகோ எம்பி ஆய்வு

 

திருச்சி மரக்கடை ஜீவா நகர் அருகில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைக்கு அருகில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்து உள்ள காரணத்தால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றது என்று பொதுமக்கள் திருச்சி எம்பி துரை வைகோவிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று ரயில்வே அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று துரை வைகோ எம்பி ஆய்வு செய்தார். 

முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை பிடித்து அகற்ற மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பின்னர், ரயில்வே இருப்புப் பாதை ஓரங்களில் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்புதர்களை முழுமையாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ரயில்வே அதிகாரிகளும் முட்புதர்களை உடனடியாக அகற்ற உறுதியளித்தனர். 

அதே நேரத்தில், அப்பகுதியில் சிலர் குப்பை கொட்டுவதும் இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதால், பொதுமக்களும், குடியிருப்புவாசிகளும் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று துரை வைகோ எம்பி. பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆய்வின்போது திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, முன்னாள் கவுன்சிலர் முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0