தேர்வுத்தாள் வராததால் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு: தேர்வர்கள் சாலை மறியல்

Feb 8, 2026 - 10:54
 0  27
தேர்வுத்தாள் வராததால் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு:  தேர்வர்கள் சாலை மறியல்

தேர்வுத்தாள் வராததால் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு: தேர்வர்கள் சாலை மறியல்  

த

மிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நந்தனம், அரும்பாக்கம், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் பல்வேறு குளறுபடிகளால் தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வுகள் இன்று நடைபெறும் நிலையில், குரூப் 2, 2 ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வர்களின் தேர்வு எண்கள் இல்லை, முதன்மைத் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகவும், நந்தனம் அரசு கல்லூரி தேர்வு மையத்திற்கு வினாத்தாளே இன்னும் வரவில்லை என புகார் எழுந்ததைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 7 மையங்களில் தேர்வுகள் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது நடைபெறும் என்பதற்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று காலை தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்ற பின்பு தேர்வு ரத்து என்பது மிகவும் வேதனை அளிப்பதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வைஷ்ணவா கல்லூரி மையத்தில் ஏற்பட்டக் குளறுபடிகளால் ஆத்திரமடைந்தத் தேர்வர்கள், தற்போதுச் சென்னை அரும்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வாணையம் முறையானத் திட்டமிடல் இல்லாமல் தேர்வை நடத்தியதே இதற்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்வாணையம் சார்பில் மாற்றுப் பேருந்துகள் மூலம் தேர்வர்களைச் சரியான மையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியான போதிலும், குழப்பம் நீடித்ததால்த் தேர்வினை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இந்தத் திடீர் ரத்து அறிவிப்பு, பல மாதங்களாகக் கடினமாக உழைத்துப் படித்து வந்தத் தேர்வர்களிடையேப் பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்வாணையத்தின் இத்தகையத் தொடர் குளறுபடிகள் குறித்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களதுக் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0