வரும் 18ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
வரும் 18ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் பிப்ரவரி 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு;
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனை தமிழக அரசே எடுத்து நடத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு அளவிற்கு மது விற்பனை செய்யப்படுகிறது. வார இறுதி நாட்களில் இதன் வருமானம் இரட்டிப்பாகும். அதாவது ரூ.120 முதல் ரூ.150 கோடி மது விற்பனையாகும். குறிப்பாக பண்டிகை நாட்களான புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற தினத்தில் தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இந்த பண்டிகை காலங்களில் வெளியாகும் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் வசூலை விட டாஸ்மாக் வசூல் அதிகமாக உள்ளது.
வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் விளங்குகிறது. அரசு இயந்திரமே டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை வைத்து தான் இயங்குவதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடிமகன்களுக்கும், தமிழக அரசுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே இதே கோரிக்கைகளை முன்வைத்து ஏ.ஐ.டி.சி, சி.ஐ.டி.யூ போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து இதனை வலுப்படுத்தியுள்ளன. முதலில் பிப்ரவரி 17ம் தேதி (நாளை) முதல் கடையடைப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து இருந்த நிலையில், இப்போது கடையடைப்பு போராட்டத்தை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ஆகையால் நாளை இரவு முதல் கடைகளை அடைத்தபின்பு சாவிகளை ஒப்படைத்து விட்டு போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர் சங்கங்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தையும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதும், திருச்சியில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பல்வேறு இடங்களிலும் வேலை நிறுத்த அறிவிப்பு குறித்த போஸ்டர் மற்றும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
1