மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்- வைகோ 

Feb 19, 2026 - 12:53
 0  11
மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்- வைகோ 

மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்- வைகோ 

ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி. தேமுதிக சேர்ந்ததும் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்றிருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பிரதமர் மோடி 3 முறையல்ல, 33 முறை தமிழகத்துக்கு வந்தாலும் பாஜவை இங்கு கால் பதிக்க வைக்க முடியாது. மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்.ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. இண்டியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் தலைமை ஏற்க வேண்டுமென மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குரல்கள் வருவது திமுகவுக்கு பெருமை. கூட்டணியில் இருப்பவர்களும் பெருமைப்படுகிறோம்.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி. தேமுதிக சேர்ந்ததும் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் கலகலத்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

மேலும் தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, “திரைப்படங்களைப் பார்த்து சில இளைஞர்களுக்கு விருப்பம் வந்திருக்கிறது. அதை பார்த்து அவர்கள் செல்கிறார்கள். ஆனால் அது தேர்தல் முடிவுகளில் வெற்றியை, தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தாது என தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0