10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை பணிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்- உடற்கல்வி ஆசிரியர் சங்கம்

Feb 22, 2026 - 16:08
 0  6
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை பணிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்- உடற்கல்வி ஆசிரியர் சங்கம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை பணிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்- உடற்கல்வி ஆசிரியர் சங்கம் 

 

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்க்கு சங்கத்திற்கு உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் சங்கர பெருமாள் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

 மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு அறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். ஆனால் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு பணியில் பறக்கும் படையினை தவிர்த்து அறை கண்காணிப்பாளர் பணியில் கடந்த சில ஆண்டுகளாக பணிநியமனம் செய்து வருகிறார்கள். ஆனால் பறக்கும் படையில் மட்டும் நியமனம் செய்வது கிடையாது.

 எனவே, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் பறக்கும் படையில் நியமனம் செய்வதில் தகுதி இல்லை என்று நினைத்தால் அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்த தேர்வு பணியில் நியமனம் செய்ய வேண்டாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

உடற்கல்வி ஆசிரியர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பணியாற்றுவதால் அவர்களை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை உள்ளிட்ட மற்றும் அறை கண்காணிப்பாளர் பணி உள்ளிட்ட பணிகளில் நியமனம் செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கின்றோம்.

மேற்கண்டவாறு உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் சங்கர பெருமாள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0