திருச்சி மேற்கு தொகுதியில் ரூ.14.41 கோடியில் பல்வேறு நலத்திட்ட பணிகள்; அமைச்சர் கே என் நேரு திறந்து வைப்பு
திருச்சி மேற்கு தொகுதியில் ரூ.14.41 கோடியில் பல்வேறு நலத்திட்ட பணிகள்; அமைச்சர் கே என் நேரு திறந்து வைப்பு
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் அரசு திட்ட நிதி மற்றும் மாநகராட்சி நிதியின் கீழ் மொத்தம் 14.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
அதன்படி 53-வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூபாய் 45 70 லட்சம் மதிப்பில் நுழைவாயில்,52 வது வார்டில் கொட்ட கொல்லைத் தெருவில் ரூ 25 லட்சம் செலவில் பல்நோக்கு அலுவலக கட்டிடம், 52 வது வார்டில் பீமநகரில் ரூ 60 லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம்,52 வது வார்டில் 25 லட்சம் மதிப்பில் அலெக்ஸாண்ட்ரியா சாலையில் பல்நோக்கு அலுவலக கட்டிடம் மற்றும் 54 வது வார்டில் 29.50 லட்சம் மதிப்பில் வேடுவர் தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம்,56 வது வார்டில் கவிஞர் நந்தலாலா பெயரில் சாலை திறப்பு மற்றும் ரூ95 லட்சம் மதிப்பில் சொசைட்டி காலனி பகுதி எஸ் எஸ் நகர் அருகில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 57வது வார்டில் 15.97 லட்சம் மதிப்பில் அந்தோணியார் கோவில் தெருவில் சமுதாய கழிப்பிடம், 31.25 லட்சம் மதிப்பில் ராஜீவ் காந்தி நகரில் பொதுக் கழிப்பிடம், 30 லட்சம் மதிப்பில் எடமலைப்பட்டி புதூரில் நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம்,எடமலைப்பட்டி புதூரில் 30 லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம்,62 வது வார்டில் 34.25 லட்சம் மதிப்பில் கீழப் பஞ்சப்பூரில் புதிய நவீன பொதுக் கழிப்பிடம்,60-வது வார்டில் ரூ30 லட்சம் மதிப்பில் காஜாமலையில் நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம், 26வது வார்டில் ரூ171 லட்சம் மதிப்பில் கல்லாங்காடில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி, 25 வது வார்டில் 139 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி,27வது வார்டில் 28 லட்சம் மதிப்பில் பாபு செட்டி தெருவில் பல்நோக்கு கட்டிடம், 13.50 லட்சம் மதிப்பில் சங்கீதபுரத்தில் புதிய நியாய விலை கட்டிடம் திறப்பு,101.10 லட்சம் மதிப்பில் 27வது வார்டில் பென்சனர் தெருவில் கோஷா மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடம், 29வது வார்டில் ஆழ்வார்தோப்பு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு அலுவலக கட்டிடம், 23வது வார்டில் 25 லட்சம் மதிப்பில் புத்தூர் ஹை ரோடு தெற்கு எடத்தெரு சந்திப்பில் பல்நோக்கு அலுவலக கட்டிடம், 440 லட்சம் மதிப்பில் உறையூர் மருத்துவமனை சாலையில் புதிய தினசரி சந்தை மற்றும் 8வது வார்டில் ரூ28 லட்சம் மதிப்பில் சுப்பிரமணிய நகரில் பல்நோக்கு அலுவலக கட்டிடம், 8வது வார்டில் ரூ30 லட்சம் மதிப்பில் உறையூர் பாண்டமங்கலத்தில் நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் என ரூ.14.41 கோடி மதிப்பில் பல்வேறு கட்டிடங்களை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகரச் செயலாளர் மாநகராட்சி மேயர் அன்பழகன், கவுன்சிலர் எல்.ரெக்ஸ் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0