நம்பிக்கை வாக்கெடுப்பதில் த.வெ.க அரசு வெற்றி - சபாநாயகர் அறிவிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசு வெற்றி - சபாநாயகர் அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்து 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; கடந்த மே 10-ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட த.வெ.க தலைவர் விஜய், அன்றைய தினமே இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு என 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதேபோல் 9 துறைகளுக்கான அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதன்பிறகு மே 11-ம் தேதி சட்டசபை தொடங்கப்பட்ட நிலையில், அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்த முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு; 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுனரிடம் சமர்பித்து முதல்வராக பதவியேற்றுக்கொண்ட த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை முதல் நாளில், தற்காலிக சபாநாயகர், 2-வது நாளில், நிரந்தர சபாநாயகர், துணை சபாநாயகர் நியமிக்கப்பட்ட நிலையில், 3-வது நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
ஆதரவு அளிக்க 120 எம்.எல்.ஏக்கள் தேவை; 233 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 120 தொகுதிகள் தேவை என்ற நிலையில், த.வெ.க.வில் 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 108 தொகுதிகளில் விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்த நிலையில், ஒருவர் சபாநாயகராக மாறியுள்ளார். இதனால் அவர் வாக்களிக்க முடியாது. ஒருவருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், த.வெ.க சார்பில் 105 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்த நிலையில், தமிழக சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்ற முதல்வர் விஜய், அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்மொழிந்தார்.
முதல்வர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரே உறுப்பினரான காமராஜ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர்.
தேமுதிக பிரேமலதா பேசுகையில், குதிரை பேரம் நடந்துள்ளது, முகத்தை மூடி முதல்வரை பார்த்தவரை முதல்வர் வெளிப்படையுடன் தெரிவிக்க வேண்டும். உங்களின் ராஜ குருவுக்கு அரசு பதவி எதற்கு என காட்டமாக பேசி அமர்ந்தார்.
பாமக சார்பில் பேசிய சௌமியா அன்புமணி,தமிழகத்தில் ஒரு மதுக்கடை மூடினால் அங்கு 4 சந்துக்கடைகள் திறக்கப்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு விழிப்புடன் தொடர் முயற்சி தேவைப்படுகிறது. போதை மற்றும் மதுப்பழக்கத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது என பா.ம.க. எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கூறியள்ளார். பேசிய தகவல்கள் குறித்து விஜய் நோட்ஸ் எடுத்துக்கொண்டார். இருந்த போதும் பாமக நம்பிக்கை வாக்கெடுப்பில் விலகி நிற்கிறது என அறிவித்தார்.
பாஜக சார்பில் பேசிய போஜராஜன் பாஜக வாக்கெடுப்பில் விலகி இருப்பதாக அறிவித்தது.
பாமக, பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகியதால், மெஜாரிட்டி எண் குறைகிறது. இதுவரை விஜய் அரசுக்கு 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு அதிகமான ஆதரவை பெற்றது விஜய் அரசு. 5 பேர் விலகியதால் மெஜாரிட்டி எண் 115 ஆக குறைந்தது.
கட்சியில் கருத்து வேறுபாடு இருப்பது வழக்கம். ஆனால் அதில் ஒரு தரப்புக்கு முதல்வர் ஆதரவு அளிப்பது எந்த வகையில் நியாயம்? தே.மு.தி.க. சொன்னது போல் குதிரை பேரம் நடந்துள்ளதாக கூறுகிறேன் என்று அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மேலும், நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று நம்பி தான் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு 34 சதவீத வாக்கு தான். ஆனால் 60 சதவீத வாக்குகள் மற்ற கட்சிக்கு சென்றுள்ளது.
த.வெ.க கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை அ.தி.மு.க எதிர்க்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணியை பேச அழைத்தால், கூட்டணி சலசலப்பு ஏற்பட்டது. பல உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், எஸ்.பி.வேலுமணி பேசுவதற்கு வாய்ப்பு கேட்டதால் கொடுக்கப்பட்டது என்று சபாநாயகர் கூறிய நிலையில் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றார்.
திமுக வெளிநடப்பு செய்யும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார்.
திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்தார்.
இம்மாதம் 15ஆம் தேதி கலைஞர் உரிமைத்தொகை கொடுப்பீர்களா? காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனப் பேசினார். புதுமைப்பெண் திட்டத்தின் படி இன்னும் பணம் வரவில்லை மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு கொடுப்பதற்கு கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் மிக தாமதம் வேண்டாம் உதயநிதி கொரோனா காலத்திலேயே மகளிர் விடியல் திட்டம் கொடுத்தவர் எங்கள் தலைவர் என உதயநிதி பேசினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய் ; முந்தைய அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும், மதசார்பற்ற அரசாகவே தொடர்வோம் என முதல்வர் தெரிவித்தார்.
பின்னர் ஆறு பிரிவுகளாக வாக்கெடுப்பு நடைபெற்றது. தவெக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் காங்கிரஸ் விசிக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 144 நபர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
*ஆதரவு*
தவெக-105
அமமுக-1
காங்கிரஸ்-5
இ.கம்யூனிஸ்ட்-2
மா.கம்யூனிஸ்ட்-2
விசிக-2
ஐயுஎம்எல்-2
அதிமுக அதிருப்தி அணி-25
*மொத்தம்=144*
*எதிர்ப்பு*
அதிமுக எடப்பாடி அணியினர்=22
*நடுநிலை*
பாமக=4
பாஜக=1
*வெளிநடப்பு*
திமுக=59
தேமுதிக=1
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் 22 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதிமுக எஸ்.பி.வேலுமணி அணியினர் 25 பேர் ஆதரவாக வாக்களித்தனர். பாமகவைச் சேர்ந்த 4 பேரும், பாஜகவைச் சேர்ந்த ஒருவரும் நடுநிலை வகித்தனர்*
திமுக உறுப்பினர்கள் 59 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தேமுதிக உறுப்பினர் பிரேமலதாவும் வெளிநடப்பு செய்தார்.
ஒரு தொகுதியில் விஜய் ராஜினாமா, தவெக உறுப்பினர் ஒருவர் வாக்களிக்க நீதிமன்றம் தடை, மற்றும் சபாநாயகர் ஒருவர் என மூன்று இடங்கள் தவிர்க்கப்பட்டன.
*நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு முடிவுகள்:
தவெக அரசுக்கு ஆதரவு: 144
எதிர்ப்பு: 22
நடுநிலை: 5
திமுக, மதிமுக, தேமுதிக வெளிநடப்பு
மொத்த உறுப்பினர்கள் 231. அவைக்கு வந்துள்ளவர்கள் 171, சபாநாயகர் ஒன்று.
இந்த நிலையில் 144 நபர்களின் ஆதரவுடன் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0