சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கான அணிவகுப்பு; தொடர் குற்றங்களில் ஈடுபட்டால்...., கடுமையான நடவடிக்கை - எஸ். பி.செல்வநாகரத்தினம் எச்சரிக்கை
சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கான அணிவகுப்பு; தொடர் குற்றங்களில் ஈடுபட்டால்...., கடுமையான நடவடிக்கை - எஸ். பி.செல்வநாகரத்தினம் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை நான்கு வகைகளாக பிரிக்கும் போலீசார் a+ a,b,c என பிரித்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உட்கோட்ட காவல் அலுவலர்கள் மூலம் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் (ரவுடி பரேடு) ஆஜர்படுத்திட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி திருச்சி மாவட்ட காவல்துறை பதிவேடுகளில் இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சுமார் 364 பேரையும், ஒன்று திரட்டி, திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் உட்கோட்டம் வாரியாக நிறுத்தி அவர்களுக்கு ரவுடி பரேடு நடத்தப்பட்டது.
பின்னர் குற்றவாளிகளின் விபரம் குறித்தும், அவரவர் குடும்ப சூழ்நிலை மற்றும் குழந்தைகளை கருத்தில் கொண்டும், எவ்வாறு அவரவர் நடத்தைகளை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றி கொள்ளாத பட்சத்தில் காவல் துறையின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியும் மிக தெளிவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் முன்பு எடுத்துரைத்தார். மேலும் திருச்சி மாவட்டத்தில் 10 லட்சம் பொதுமக்கள் இருக்கின்றார்கள் என்றால் நீங்கள் 300, 400 நபர்கள் மட்டுமே. உங்களால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டால் கடும் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
அதன்பின்னர், ஒவ்வொரு சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பதிவேடுகளையும் அந்த காவல் ஆய்வாளர்கள் மூலம் சரிபார்த்து, குற்றவாளிகளின் நேர்மையான குறைகள் நிவர்தி செய்யப்பட்டது.
இந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் அணிவகுப்பில் பங்கேற்ற குற்றவாளிகள் இனிவரும் காலங்களில் எந்தவிதமான குற்றச்சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்றும் ஈடுபட மாட்டோம் என்றும், தத்தம் குழந்தைகள், குடும்ப நலனில் அக்கரை காட்டுவேன் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள பணிந்துரைக்கப்பட்டனர். இனிவரும் காலங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் மேலும் ஏதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் காவல்துறையின் நடவடிக்கை மிக மிகக் கடுமையாக இருக்கும் என எஸ்பி செல்வ நாகரத்தினம் எச்சரித்தார் .
இதுபோன்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஆஜர் அணிவகுப்பு (HS Parade) இதுநாள்வரை திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நடைபெறாத ஒன்றாகும். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், தனது மிகுந்த பணிச்சுமையிலும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி குற்றவாளிகளின் வாழ்வில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி, அவர்களது வாழ்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதும், குற்றவாளிகளை ஒரே இடத்தில் குவித்து அவர்களுக்கு எச்சரிக்கையும், புத்தி மதியும் சொல்லும் நிகழ்ச்சி இதுவரை தமிழகத்தில் எங்கும் நடைபெற்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0