முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து; வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: சிங்கப்பெண் அதிரடிப்படை
முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து; வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: சிங்கப்பெண் அதிரடிப்படை
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது.
இதனையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின் முக்கிய கோப்புகளில் கையெழுத்தை போட்டுள்ளார். முதல் கையெழுத்தாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்
இரண்டாவது கையெழுத்தாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை மற்றும் போதை பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைத்திட கையெழுத்திட்டார். அதேநேரம் தமிழகத்தின் பெரும்பாலான மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மகளிர்க்கு மாதம்தோறும் 2500, தமிழகம் முழுவதும் மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0