விஜய்யை சந்திக்க மறுத்த ஆளுநர் ; தமிழக அரசியலில் மீண்டும் திக் திக் நிமிடங்கள்
விஜய்யை சந்திக்க மறுத்த ஆளுநர் ; தமிழக அரசியலில் மீண்டும் திக் திக் நிமிடங்கள்
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அருதிப் பெரும்பான்மையான 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றவுடன் ஆளுநரை சந்திக்க பயணம் ஆனார். ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறி திருப்பி விட்டதால் தமிழக அரசியலில் திக் திக் நிமிடங்கள் தொடர்கிறது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி பெரும்பான்மையை எட்டியது.
இது தொடர்பாக தவெக எம்எல்ஏ ஆதவ் அர்ஜுனா கூறும்போது, “அனைத்து தோழர்களுக்கும் எங்களுடைய நன்றி. ஜனநாயகம் காக்கப்படும். தமிழக மக்களுடைய ஆதரவுடன் தமிழக முதல்வராக எங்கள் தலைவர் உருவாவார்” எனத் தெரிவித்தார்.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கியுள்ள கடிதத்தில், “தமிழக மக்களுக்கு நிலையான, ஜனநாயக முறையிலான ஆட்சி கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விசிக தனது 2 எம்எல்ஏ.,க்களின் ஆதரவையும் தவெகவுக்கு எந்த நிபந்தனையும் இன்றி வழங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயூஎம்எல் ஆதரவு அறிவிப்பு:
விசிக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது. ஆக, மொத்தம் 120 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது தவெக. அடுத்தக் கட்டமாக ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகளை எதிர்கொண்டுள்ளது.
விஜய்யை புறக்கணித்த ஆளுநர்
முன்னதாக, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் கொடுத்த ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்ட விஜய் உடனடியாக ஆளுநரை பார்க்க சென்றார். ஆளுநர் இன்று மாலை கேரளம் செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் இருந்ததால், விஜய்க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என விஜய்யை சந்திக்க மறுத்து விஜய் பயணத்தை மாற்றினார். இதனால் மீண்டும் பட்டினப்பாக்கம் இல்லம் நோக்கி திரும்பினார் விஜய்.
கடந்த ஐந்து நாட்களாகவே ஆளுநர் விஜய் சந்திப்பு தொடர்ந்த நிலையில் எல்லாம் கைகூடிய நிலையில் தற்போது விஜய்யை ஆளுநர் சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் விஜய்யின் முதல்வர் கனவு தள்ளிப் போகிறதா? அல்லது மோடி, அமித்ஷா ஆளுநருக்கு என்ன சமிக்ச்சை விடுத்தனர், நேரம் இருந்தும் விஜய்யை தவிர்த்து கேரளம் புறப்படும் ஆளுநரால் தமிழக அரசியலில் மீண்டும் திக் திக் நிமிடங்கள் தொடர்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0