ஆளுநரிடம் டி.டி.வி.தினகரன் தந்துள்ள கடிதம் ஏற்படுத்தும் திடீர் பரபரப்பு: தமிழக சட்டசபை முடக்கிவைக்க வாய்ப்பு?

May 8, 2026 - 22:52
 0  40
ஆளுநரிடம் டி.டி.வி.தினகரன் தந்துள்ள கடிதம் ஏற்படுத்தும் திடீர் பரபரப்பு: தமிழக சட்டசபை முடக்கிவைக்க வாய்ப்பு?

ஆளுநரிடம் டி.டி.வி.தினகரன் தந்துள்ள கடிதம் ஏற்படுத்தும் திடீர் பரபரப்பு: தமிழக சட்டசபை முடக்கிவைக்க வாய்ப்பு?

தவெக ஆட்சி அமைக்க அமமுக எம்.எல்.ஏ ஆதரவு கடிதம் கொடுத்தது போன்ற போலியான கடிதத்தை தவெக கொடுத்திருப்பதாக டிடிவி தினகரன், ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார்.

மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் வென்ற தங்களது கட்சியின் எம்.எல்.ஏ காமராஜை காணவில்லை எனவும், குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிப்பதாகவும் டி.டி.வி தினகரன் ஆளுநரிடம் புகார்.

விஜய் தங்களுக்கு 118 எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை எண்ணிக்கை இருப்பதாக ஆளுநர் மீண்டும் சந்தித்து கடிதம் கொடுத்துள்ள நிலையில் குதிரை பேரம் என எழுப்பப்பட்டுள்ள புகார் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், திடீரென குதிரை பேரம் நடப்பதாக புதிய குற்றச்சாட்டை டி.டி.வி.தினகரன் முன் வைப்பு. குதிரை பேரம் நடப்பது உண்மை என கண்டறியப்பட்டால் அதை காரணமாக வைத்து குதிரை பேரம் நடப்பதை தடுக்க ஆளுநர் சட்டசபையை முடக்க அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0