விஜய் அலுவலகத்திற்கு வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு: தவெக 97 தொகுதிகளில் முன்னிலை; திமுக பின்னடைவு

May 4, 2026 - 10:14
 0  71
விஜய் அலுவலகத்திற்கு வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு: தவெக 97 தொகுதிகளில் முன்னிலை; திமுக பின்னடைவு

விஜய் அலுவலகத்திற்கு வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு: தவெக 97 தொகுதிகளில் முன்னிலை; திமுக பின்னடைவு

தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்தின் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 85.1% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி

தற்போதைய நிலவரப்படி தவெக 97, அதிமுக 71, திமுக 63 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

தவெக முன்னிலை பெரும் நிலையில், தமிழகம் முழுவதும் விஜய் அலுவலகங்கள் முக்கிய நிர்வாகிகள் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் அலுவலகமான பனையூரில் வழக்கத்தை விட அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் விஜய் வீட்டிற்கும் போலீசார் அதிகளவு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தவெக முன்னிலை பெற்று வருவதால் ரசிகர்கள் தொண்டர்கள் விஜய் வீட்டிற்கு அலுவலகத்திற்கு அதிக அளவு திரள ஆரம்பித்து இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 18,59,016 வாக்குகள் பதிவாகி, 86.58 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக 27 சுற்றுகளிலும் குறைந்தபட்சமாக 20 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

சுற்றுகளின் விவரம்: திருச்சி மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு சுற்று விவரம்

ஸ்ரீரங்கம் : 27 சுற்று, திருச்சி கிழக்கு : 22 சுற்று, திருச்சி மேற்கு : 22 சுற்று, திருவரம்பூர் : 23 சுற்று, மணப்பாறை : 25 சுற்று,, லால்குடி : 20 சுற்று, மண்ணச்சநல்லூர் : 22 சுற்று, துறையூர் : 22 சுற்று, முசிறி : 21 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன.

 முதல் சுற்று முடிவில் திருச்சியில் உள்ள ஒன்பது தொகுதிகளில் தவெக ஆறு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

திருச்சி மேற்கு திருவெறும்பூர் தொகுதிகளில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0