தபால் வாக்குகளில் திமுக முன்னிலை; திருச்சி கிழக்கில் விஜய் பின்னடைவு:திருச்சி மேற்கில் கே,என் .நேரு பின்னடைவு
தபால் வாக்குகளில் திமுக முன்னிலை; திருச்சி கிழக்கில் விஜய் பின்னடைவு:திருச்சி மேற்கில் கே,என் .நேரு பின்னடைவு
தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்தின் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 85.1% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
திருச்சியில் இரண்டு வாக்கு எண்ணும் மையங்கள்: டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் , மணப்பாறை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அதேபோல் புலிவலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மணச்சநல்லூர், முசிறி, துறையூர், லால்குடி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது.
தபால் வாக்கு நிலவரப்படி திமுக 11 தொகுதிகளிலும், அதிமுக இரண்டு தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்று இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது.
திருச்சி மேற்கு-9106 வாக்குகள் பெற்று தவெக முன்னிலை. தபால் வாக்கில் அமைச்சர் நேரு பின்னடைவு.
துறையூர் காங்கிரஸ் முன்னிலை
லால்குடி பாரிவள்ளல் திமுக முன்னிலை
மண்ணச்சநல்லூர் கதிரவன் திமுக முன்னிலை
முசிறி யோகநாதன் அதிமுக முன்னிலை
திருச்சி கிழக்கு தொகுதியில் ஜோசப் விஜய் பின்னடைவு
தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.
மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இந்தமுறை 4 முனைப் போட்டி நிலவியது. புதிதாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தவெக, இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0