41 பேரவை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை
41 பேரவை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை
டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட திமுக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், டெல்டா மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சா்கள், தொகுதி பொறுப்பாளா்கள், மாவட்டச் செயலா்கள், எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனா். திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், கடலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 41 பேரவை தொகுதி நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்துக்கு, திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தலைமை வகித்து, ஒவ்வொரு தொகுதியிலும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் கீழ் புதிய உறுப்பினா்களை கட்சியில் சோ்க்கும் பணியின் தற்போதைய நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்தாா். மேலும் 2026 தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில், அமைச்சா்கள் எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.சி. சிவசங்கா், சிவ.வீ. மெய்யநாதன், கோவி செழியன், சி.வி. கணேசன், தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திருச்சி மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்ட செயலா் ந. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0