நாளை வாக்கு எண்ணிக்கை: திருச்சியில் போக்குவரத்து மாற்றம் - ஆட்சியர் சரவணன்
நாளை வாக்கு எண்ணிக்கை: திருச்சியில் போக்குவரத்து மாற்றம் - ஆட்சியர் சரவணன்
தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்தின் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 85.1% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. மே.4 நாளை வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியரால் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. நான்கு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரும் பயணிகள் பேருந்துகள் தவிர்த்து, புதுக்கோட்டை நோக்கி செல்லும் மற்ற வாகனங்கள் அனைத்தும் பஞ்சப்பூர் புறவழிச்சாலை வழியாக செல்லவேண்டும் . புதுக்கோட்டையிலிருந்து வரும் வாகனங்கள் கும்பக்குடி சந்திப்பு, பஞ்சப்பூர் வழியாக செல்லவேண்டும். பயணிகள் பேருந்துகள் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் டிவிஎஸ் டோல்கேட் வழியாக செல்லாமல் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் ராஜாராம் சாலை, எல்ஐசி காலணி மன்னார்புரம் வழியாக செல்லவேண்டும். ஏர்போர்ட் மற்றும் புதுக்கோட்டை செல்லும் மற்ற வாகனங்கள் டிவிஎஸ் டோல்கேட் வழியாக செல்லாமல் மன்னார்புரம் எல்ஐசி காலனி, கே.கே.நகர் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மத்திய மாவட்ட ஐஜி அலுவலகம் ஜங்ஷனிலிருந்து ரேஸ் கோர்ஸ் நுழைவு வாயில் வரை பொது வாகனங்கள் அனுமதி இல்லை. என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0