விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கில் 55.95 சதவீத வாக்குப்பதிவு; வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் வாக்காளர்கள்
விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கில் 55.95 சதவீத வாக்குப்பதிவு; வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் வாக்காளர்கள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்து வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் விறுவிறுப்புடன் வந்து தத்தம் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில் திருச்சி கிழக்கு தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை துவக்கிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பெரம்பூர் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதால் அனைவராலும் திருச்சி கிழக்கு உற்று நோக்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அதிமுக சார்பில் ராஜசேகரன் மற்றும் தவெக சார்பில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான சி.ஜோசப்விஜய் இடையே கடுமையான முக்கோணப் போட்டி நிலவுகிறது.
கிழக்கு தொகுதி பொறுத்த வரை மொத்தம் 2,17,397 வாக்காளர்கள் (1,04,883 ஆண்கள், 11,2460 பெண்கள், 54 மூன்றாம் பாலினத்தவர் வாக்களிக்க ஏதுவாக உள்ளனர்.
இந்த நிலையில், காலை முதல் திருச்சி கிழக்குத் தொகுதியில் பரப்புரப்புடன் இளைஞர்கள் கல்லூரி மாணவிகள் தத்தம் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி திருச்சி கிழக்கு தொகுதியில் 55.95 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் என பலரும் தத்தம் வாக்குகளை சரிவர பதிவிட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளையும் சேர்த்து சராசரியாக 57 சதவீத வாக்குப்பதிவு பகல் ஒரு மணி நேர நிலவரப்படி பதிவாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவினை விட இம்முறை வாக்குப்பதிவு 17 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0