சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்

Apr 23, 2026 - 09:24
Apr 23, 2026 - 10:13
 0  42
சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்

சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் தவெக மூலம் நேரடி அரசியலில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி சார்பில் தமிழகத்தின் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை - நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இந்த தேர்தலில் சென்னை - பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

வழக்கமாகவே சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் நடிகர் விஜய் வாக்களிப்பார். இந்தமுறை தவெக தலைவராக வாக்களித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக திரை பிரபலங்களில் முதல் ஆளாக நடிகர் அஜித் காலை 7:00 மணிக்கு முதல் வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் கமலஹாசன், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சிவக்குமார்  உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் தத்தம் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0