தமிழக சட்டப்பேரவை தேர்தல் துவங்கியது ; திருச்சி மேற்கு தொகுதியில் வி.வி.பேட் பழுதால் கேஎன் நேரு உள்பட வாக்காளர்கள் காத்திருப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் துவங்கியது ; திருச்சி மேற்கு தொகுதியில் வி.வி.பேட் பழுதால் கேஎன் நேரு உள்பட வாக்காளர்கள் காத்திருப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் 2,787 வாக்குச் சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ள. இதில் வாக்களிக்கவுள்ள 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்களுக்காக 13,372 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மணப்பாறையில் 346, ஸ்ரீரங்கத்தில் 367, திருச்சி மேற்கு 305, திருச்சி கிழக்கு 304, திருவெறும்பூா் 312, லால்குடி 276, மண்ணச்சநல்லூா் 297, முசிறி 283, துறையூா் தனி 297 என மொத்தம் 2,787 வாக்குச்சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள்- 10,40,900, பெண்கள்- 11,05,841, பிற- 310 என மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக இருக்கின்றனர். இன்று காலை சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வெயிலுக்கு முன்னதாக வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 6 மணி முதலே திருச்சியில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர்.
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தில்லைநகரில் விவி பேட் மெஷின் பழுதானதால் திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே என் நேரு வாக்களிக்க வந்து கடந்த அரை மணி நேரமாக காத்திருக்கிறார். அதை வாக்குச்சாவடியில் 50க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். இதே போல் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பிலோமினாள்புரம் நடுநிலைப்பள்ளியில் பூத் நம்பர் 85ல் இவிஎம் மெஷின் பழுதானதால் காலை 6 மணிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் ஆர் மனோகரன் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0