இராமநாதபுரம் ஹைட்ரோ கார்பன்; அனுமதி கொடுத்த சுற்றுச்சூழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
இராமநாதபுரம் ஹைட்ரோ கார்பன்; அனுமதி கொடுத்த சுற்றுச்சூழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் பேரழிவு ஏற்படுத்தும் என்பதால் ஒட்டுமொத்தமாக தமிழக அரசு தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இராமநாதபுரத்தில் ஓஎன்ஜிசிக்கு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை முதலமைச்சர் அனுமதி பெறாமலேயே ஓஎன்ஜிசிக்கு அனுமதி கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
இது குறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசின் அனுமதியின்றி அனுமதி கொடுத்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மீது உரிய துறை நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை திரும்ப பெறுவதோடு,மத்திய அரசின் ஏல பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் நிரம்பினால் தான் வைகை பாசனத்தில் உபரிநீர் பல பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்க அரசானை உள்ளது. இந்நிலையில் 136 அடி நிரம்பும் நிலையில் 58ம் கால்வாய் உள்ளிட்ட பலப் பகுதிகளுக்கு தண்ணீரை வழங்க முடியாத முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது.
உங்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்படும் பட்டா மாறுதல் உள்ளிட பணிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப லஞ்சம் பேரம் பேசப்படுகிறது. குடும்ப தலைவி உதவி திட்டம், முதியோர் உதவிதிட்டம் உள்ளிட்ட வைக ளுக்கும் பேரம் பேசப்படும் நிலை உள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் பெருமளவில் காலிப்பணியிடம் ஏற்ப்பட்டுள்ள நிலையில் உங்களுடன் முதல்வர் திட்டத்தால் அலுவலகங்கள் முடங்கி கிடக்கிறது. திட்டத்தில் பயனடைந்தவர்கள் விபரத்தை கிராமங்கள் தோறும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி ஆணைய கூட்டம் இன்றும் 1 நாளையும் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பில் காத்துள்ளோம். குறிப்பாக வேளாண் உற்பத்தி உணவு பொருட்களுக்கு பாக்கெட்டில் அளிக்கப்பட்ட அரிசி பருப்பு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்களிக்க வேண்டும். வேளாண் உற்பத்திக்கான
டிஏபி,யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்களிக்க வேண்டும். கதிர் அறுவடை இயந்திரம், உழவு இயந்திரம், இறவை பம்ப் செட் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களுக்கும் வரி விலக்கு முழுமையாக அளிக்கப்பட வேண்டும்.
பருத்தி இறக்குமதி வரி குறித்து மறுபரிசீலினை செய்யப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்திற்க்கு பாதிப்பு இல்லாத வகையில் இறக்குமதிக்கான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நெல் கொள்முதலில் தனியாரை அனுமதிக்க கூடாது. காவிரி டெல்டாவில் குறுவை கொள்முதலை விரைந்து துவங்க வேண்டும். ரபிபருவ கொள்முதல் தடைப்பட்டுள்ளது. சுமார் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதுவரையிலும் இல்லாத வகையில் அதிக பரப்பளவில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது. இதனை உடனுக்குடன் கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் உணவுத் துறை வேளாண் துறை விவசாயிகள் கூட்டம் அவசரமாக நடத்தி திட்டமிட வேண்டும் என்றார்.
இந்த சந்திப்பின்போது மாநில பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி,சென்னை செய்தி தொடர்பாளர் சைதை சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0