2 தொகுதிகளில் ஒருவர் நிற்பது தோல்வியின் ஆரம்பம்" - விஜய் தொகுதியில் கமல்ஹாசன்

Apr 21, 2026 - 01:00
Apr 21, 2026 - 12:36
 0  30
2 தொகுதிகளில் ஒருவர் நிற்பது தோல்வியின் ஆரம்பம்" - விஜய் தொகுதியில் கமல்ஹாசன்

2 தொகுதிகளில் ஒருவர் நிற்பது தோல்வியின் ஆரம்பம்" - விஜய் தொகுதியில் கமல்ஹாசன்

​

திருச்சி கிழக்குத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கே.கே.நகர் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;

​கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் முனைவர் பட்டம் பெற்றவர். பள்ளிக்கூடத்தில் படிக்காதவன் நான். அதேசமயம் முனைவர் பட்டம் பெற்ற படித்த பலரோடு எனக்குப் பழக்கம் உண்டு 

அவங்க கிட்ட பேசும் போது படித்தது தான் நான் உங்களிடம் பேசும் பேச்சு. எனக்கு பள்ளிக்கூடத்திற்கு வெளியே நிறைய வாத்தியார்கள் இருந்தார்கள் அதில் முதன்மையான வாத்தியார் கலைஞர் அன்றும் மனப்பாடம் இன்று மனப்பாடம் எனக்கு.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரைப் (விஜய்) போலவே நானும் சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்தவன். எனக்கு எல்லா நட்சத்திரங்களையும் தெரியும். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற மேதைகள் என்னை மடியில் தூக்கி வைத்து வளர்த்தாலும், நான் யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள மாட்டேன். அனைவரையும் 'ஐயா' என்றுதான் அழைப்பேன், 'அங்கிள்' என்று கூப்பிட மாட்டேன்.

நான் எம்ஜிஆர் சொன்னதை கேட்டு வளர்ந்து வந்தவன் நான், அப்படி நான் கேட்காமல் போய் இருந்தால் இந்த நல்ல புத்தி கிடைத்திருக்காது.

வேலி தாண்டுகின்ற ஆடுகள் இருக்கத்தான் செய்யும். எனது முரட்டு ரசிகர் கென்னடி என்பவர் ரஜினி ரசிகரின் கையை கத்தியால் குத்தினார். அப்போது நானும் ரஜினியும் இணைந்து அவர்களை சமாதானப்படுத்தினோம். சினிமா என்பது வேறு, ரஜினிக்கும் கமலுக்கும் இடையிலான நட்பு என்பது வேறு என்பதை எங்களது ரசிகர்களுக்கு புரிய வைத்தோம். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும. கத்தியால் குத்திய வரை மன்னிப்பு கேளு என்று நான் சொன்னேன். அவர் மிகுந்த வெட்கப்பட்டு கொண்டார். இத்தகைய குணாதிசயங்களுக்கு நேர் எதிராக ஒருவன் மாற வேண்டும் என்று சொன்னால் நீ போலீஸ் ஆக வேண்டும் என்று சொன்னேன். நான் சேர்த்து விடுகிறேன் என்றார். கடைசியில் அவர் போலீஸ்காரனாக தான் செத்துப் போனார் தூத்துக்குடியில.

ஒரு தலைவனுக்கு தொண்டனை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற அந்தக் கடமை இருக்கின்றது. தொண்டனுக்கு அப்படிப்பட்ட தலைவன் கிடைக்க வேண்டியது முக்கியம். 

​சினிமா பளபளப்பைப் பார்த்து தொண்டர்களும், ரசிகர்களும் கிடைப்பார்கள். ​ஆனால் அவர்களிடம் டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டு அவர்களைக் கைவிடுவது துரோகம்.

​அதனால்தான் 40 ஆண்டுகளுக்கு முன்பே என் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றினேன்.

​ஒரு காலத்தில் என்னையும் ரஜினியையும் 'விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்று ஏளனம் செய்தார்கள். இன்று 'ரஜினி சார்', 'கமல் சார்' என அழைக்கப்படுவதற்கு பொதுமக்களாகிய, ரசிகர்களாகி நீங்கள்தான் காரணம். ​ரசிகர்கள் ரசனையைத் தனியாக வைத்திருக்க வேண்டும்; இது நாடு, இங்கு அரசியல் முக்கியம். 

அரசியலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் என்பார்கள். ஆனால் அதுவே தோல்வியின் ஆரம்பம். இரண்டு தொகுதியில் நின்றால், ஒரு தொகுதிக்குத் துரோகம் செய்வது போன்றது. 

இன்றும் வடக்கில் இருந்து படையெடுப்பு வருகிறது; அதை எதிர்கொள்கிறது இந்த கூட்டணி. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருப்பது நம் அசிரத்தையா, அவர்களின் கருணை இன்மையா என யோசியுங்கள். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஒரு கணிப்பு சொல்கிறேன். நடக்கிறதா, இல்லையா என்று பாருங்கள். இத்தனை பேருக்கு முன்னால் தைரியமாக சொல்கிறேன். திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது. இது, நான் ஒருவன் எடுக்கும் சூளுரை அல்ல, சரித்திரம் சொன்ன கதை. வந்தாரை வாழ வைப்பது, நம் பெருந்தன்மை. ஆனால், வந்தவர்கள் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ள விடமாட்டோம். வடக்கர் படையெடுப்பை முறியடிப்பது மட்டும் முக்கியமல்ல; இந்தியா என்பதை சேர்த்து தைத்து கொடுத்தது நாமும் தான். திடீரென ஒப்பந்தத்தை மீறக் கூடாது. மீறினால், மீண்டும் போர்க்குணம் திரும்பி விடும். 

சிலருக்கு அரசியல் என்பது வெறும் இரண்டு மணி நேர விவகாரமாகிவிட்டது.

​கிழக்கிந்திய கம்பெனி போன பிறகு இப்போது 'வட இந்திய கம்பெனி' வந்துள்ளது. நான் 33 சதவீத இடஒதுக்கீட்டிற்குப் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன், அதை முன்னால் கொண்டு செல்லவே முயல்வேன். திராணி இருந்தால் 543 எம்.பி-க்களில் 33 சதவீதத்தை பெண்களுக்குக் கொடுங்கள். இல்லையென்றால் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சகோதரர் இனிக்கோ இருதயராஜ் ஒழுங்காக வேலை செய்வார் எனத் தெரிந்தால் மட்டும் வாக்களியுங்கள். வாக்குகளை வீணாக்காதீர்கள். மக்கள் முக்கியம், நாடு முக்கியம். 1967-க்குப் பிறகு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பதுதான் நல்லது என்று மூதறிஞர் ராஜாஜியே ஒருமுறை கூறினார். ராஜாஜி உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டார், சரித்திரம் தெரிந்தவர்களுக்கு தெரியும், தெரியாதவர்களுக்கு உதயசூரியன் எப்படி வந்தது என்ன என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அந்தப் பாரம்பரியம் மிக்க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இனிக்கோ இருதயராஜை வெற்றி பெறச் செய்யுங்கள் என பேசினார் கமல்ஹாசன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0