ஜனநாயகமா பணநாயகமா? பறக்கும் படைக்கு சவால் விடும் அரசியல் கட்சியினர்
ஜனநாயகமா பணநாயகமா? பறக்கும் படைக்கு சவால் விடும் அரசியல் கட்சியினர்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடக்கின்றது. அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரங்கள் நாளை மாலையுடன் ஓய்வு பெறுகின்றது.
வாக்காளர்கள் வாக்களிக்க இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்ட அரசியல் கட்சியினர் வாக்குக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் துவங்கி, கோடீஸ்வர வேட்பாளர்கள் ஆயிரத்திலிருந்து இரு மடங்கு, ஐந்து மடங்கு என வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஜரூராக நடந்து வருகிறது.
தேர்தல் பறக்கும் படையினருக்கு சவால் விடும் வகையில், பிரதான கட்சிகள் கட்சி பாரபட்சமின்றி வாக்காளர்களுக்கு தாராளம் காட்டி வருகின்றனர்.
கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தலில் நடிகர் வரவை கண்டு அச்சமடைந்த பிரதான கட்சிகள் பல ஆயிரம் கோடிகளை செலவழித்துக் கொண்டிருக்கின்றது.
அதே நேரம் பிரதான அரசியல் கட்சியினர் கொடுக்கும் பணத்தை வாங்காமல் எங்களை நம்புங்கள், வாக்காளர்களை கண்டிப்பாக ஏமாற்ற மாட்டோம் எனக்கூறி உச்சபட்ச வேதனையுடன் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தம் தொகுதிகளில் சுழன்று வருகின்றனர்.
என்னதான் தேர்தல் ஆணையம் தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் பல்வேறு நூதன பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், சோதனைகளில் கெடுபிடி காட்டினாலும் ஜனநாயகமா பணநாயகமா எனும்போது திருமங்கலம் ஃபார்முலா இந்த தேர்தலில் பிரம்மாண்டமாக எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0