விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : ஜூன் 15-ல் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Apr 20, 2026 - 10:50
Apr 20, 2026 - 10:58
 0  45
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : ஜூன் 15-ல் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : ஜூன் 15-ல் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

2026 சட்டமன்றத் தேர்தலை டார்கெட் செய்து நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை துவக்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி துவக்கினார். கட்சியை துவக்கிய விஜய் திராவிட கட்சிகளின் எதிர்ப்பு நிலைப்பாட்டை முன்னிறுத்தி தமது பயணத்தை துவக்கியதோடு, முதல்வர் கனவோடு தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடும் என்று அறிவித்து, அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.

விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் அவருடைய பிரச்சார பயணங்களுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

அதே நேரம் விஜய் கட்சி தொடங்கிய நாளிலிருந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தனிப்பட்ட முறையில், அரசியல் காரணங்களிலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா, தன்னை விஜய் ஒதுக்கி வைத்திருப்பதாகவும், வேறு ஒரு நடிகையுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தை நாடிய சங்கீதா தனது மனுவில், விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அதனை துண்டிக்கும்படி பலமுறை கூறியும் தொடர்ந்து வந்ததாகவும், தொடர்ந்து தன்னை மனதளவிலும் பொருளாதார அளவிலும் விஜய் ஒதுக்கி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் இதனால் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும் திருமணத்தை மீறி உறவு வைத்திருக்கும் விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு சென்று எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் நானும் எனது குழந்தையும் அவமானங்களை சந்தித்தோம் என மனு அளித்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு செங்கல்பட்டு ஒன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏப்ரல் 20-ம் தேதிக்கு சங்கீதா மற்றும் விஜய் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களில் உள்ள நிலையில், இந்த வழக்கு விஜய்யின் இமேஜை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆவாரா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து வந்தது.

மேலும் தேர்தல் நேரத்தை காரணம் காட்டி விஜய் அவரது வழக்கறிஞர் மூலம் விசாரணை தேதியை மாற்ற கோரிக்கை வைக்கலாம் அல்லது இணையும் வாயிலாக ஆஜர் ஆகலாம் என்று கூறப்பட்டது .

 தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா வழக்கு தொடுத்து இருப்பது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 முன்னதாக இன்று விஜய் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை வில்லிவாக்கம், பகுதிகளில் சாலைவல பிரச்சாரம் மேற்கொண்டு வருவதை முன்னிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரியும் அல்லது காணொளியில் ஆஜராக அனுமதி கோரியும் வழக்கறிஞர் குமரேசன் மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி விஜய்- சங்கீதா ஜூன் 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் .

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0