ஆட்சி செய்ய தெரிந்த ஒரு கட்சி ஆட்சியில் உட்கார்ந்தாத்தான் மாற்றம் - மறைமுகமாக விஜய்யை தாக்கிய அண்ணாமலை

Apr 17, 2026 - 00:31
 0  33
ஆட்சி செய்ய தெரிந்த ஒரு கட்சி ஆட்சியில் உட்கார்ந்தாத்தான் மாற்றம் - மறைமுகமாக விஜய்யை தாக்கிய அண்ணாமலை

ஆட்சி செய்ய தெரிந்த ஒரு கட்சி ஆட்சியில் உட்கார்ந்தாத்தான் மாற்றம் - மறைமுகமாக விஜய்யை தாக்கிய அண்ணாமலை

 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் ஆனால் பறக்கும் வெயிலையும் கடந்து தக தக வென தகிக்கின்றது. அந்த வகையில், திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமாரை ஆதரித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை காட்டூரில் வாக்கு சேகரித்தார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ப.குமார் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்து பேசியதாவது;

இரண்டு முறை நம்முடைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நமக்கெல்லாம் அற்புதமாக பணி செய்து இந்த தொகுதியிலேயே 2021-க்கு பிறகும் கூட ஒரு மக்கள் சேவகனாக உங்களுக்காக பணி செய்யக்கூடிய அருமை சகோதரர் ப.குமார் அவர்களுக்காக நாம் இங்கே நின்று கொண்டிருக்கின்றோம்.

 அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திலே ஒரு பெரிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது. நம்முடைய அன்பு சொந்தங்கள் எல்லாம் நிச்சயமாக தமிழகத்திலே திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி வீட்டுக்கு செல்ல வேண்டும். நிச்சயமாக ஒரு புதிய ஆட்சி நம்முடைய என்டிஏ வரணும் சகோதரர் எடப்பாடி பழனிசாமி மே 4ம் தேதிக்கு பிறகு தமிழகத்தினுடைய முதலமைச்சராக வரவேண்டும் என்று எல்லா மக்களுமே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஐயா டெல்டாவிலிருந்து தென் தமிழகத்திலிருந்து கோயம்புத்தூரிலிருந்து இப்ப சென்னை வரை எல்லோருக்கும் திமுக வேண்டாம் என் டி ஏ வேண்டும். ஐயா இன்னைக்கு நாம திருவெறும்பூர் தொகுதியில மிக முக்கியமாக நம்முடைய திருச்சி மாநகரத்தினுடைய தொகுதியில் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 11 ஆம் தேதி இங்கு வந்து வாக்கு சேகரித்தார். 

இங்க வந்து என்ன பேசிட்டு போனார்னா நான் ஜெயிப்பது முக்கியமல்ல அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஜெயிக்க வைக்கணும். ஐயா அவர் எதுக்கு பேசினாங்கன்னு தெரியுமா? அன்பில் மகேஷ் பொய்யாமொழியைப் பொறுத்தவரை தமிழகத்தினுடைய பகுதிநேர கல்வி அமைச்சர் பார்ட் டைம் எஜுகேஷன் மினிஸ்டர் பார்ட் டைம் தான் ஃபுல் டைம் இல்லைங்க. பகுதிநேர ஐயா அவருடைய ஃபுல் டைம் வேலை என்னன்னா அகில உலக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினுடைய தலைவராக செயல்படுவதே அவரது ஃபுல் டைம் வேலை. எந்த வேலையுமே பள்ளிக்கல்வித் துறையில செய்யாம ஐந்தாண்டு காலத்தை ஓட்டிவிட்டு நண்பர்களாக ரெண்டு பேரும் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

 திருவெறும்பூர்ல சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நீங்கள் தோற்கடியுங்கள். சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தோற்கடிக்கப்படுவார். ரெண்டு பேரும் ஒண்ணா தோற்கடிக்கப்படுவார்கள்.

திமுகவினுடைய ஆட்சியை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில சகோதரிகளே, தாய்மார்களே, நீங்கள் சொல்லுங்கள் ஒரு உருப்படியான ஆட்சி நடத்தினார்களா? நீங்கள் சொல்லுங்கள். பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவத்தை நீங்கள் பாருங்கள். கற்பழிப்பு வழக்குகள் மட்டுமே பாலியல் வன்கொடுமை தமிழகத்தில ஐந்தாண்டுகளில் 2080 பாலியல் வன்கொடுமை வழக்கு. படுகொலைகள் மட்டும் 8008. 18 வயதுக்கு கீழ இருக்கக்கூடிய குழந்தைகள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டம் என்று சொல்லுவோம் 39,900.

தமிழகத்தினுடைய எந்த ஐந்தாண்டு கால அரசியல் வரலாற்றிலயும் இவ்வளவு குற்றச்சம்பவங்கள் நடந்த ஒரு தமிழ்நாட்டை நாம் பார்த்தது கிடையாது. ஏன்? திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில முதன் முதலாக கூட்டு பாலியல் வன்கொடுமை, கேங் ரேப் அப்படிங்கிறது நம் ஊர்ல இப்பதான் நாம் கேட்க ஆரம்பிக்கிறோம். இதெல்லாம் நம் ஊர்ல இல்லாத விஷயத்தை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே கொண்டு வந்திருக்கின்றார்கள்.

எல்லா ஊர்லயும் நான் போய் சில திமுகவினுடைய தலைவர்களுக்கு எதிரா ஒரே ஒரு போட்டோவை காட்டுவேன். இங்கே பாருங்க போட்டோவை பாருங்கள். ஆனால் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு எதிரா ஒரு ஆல்பமே கொண்டு வந்திருக்கிறேன். இங்க ஒரு போட்டோவை காட்டினா சரியா வராதுன்னு உங்களுக்கு ஒரு ஆல்பத்தை காட்ட வேண்டும் என கையில இருக்கிற ஆல்பத்தை பாருங்கள். 

நம்முடைய திருச்சி மாவட்டத்திலே துறையூர்ல அரசு பள்ளியினுடைய நிலைமை எப்படி இருக்குன்னு பாருங்க. கேட்டா திராவிட மாடல் அரசு என்னென்னமோ பேசுவார்கள். திருச்சி துறையூர்ல அரசு பள்ளிக்கூடத்தினுடைய மேற்கூரை விழுந்து ஏற்படக்கூடிய விபத்து 22 செப்டம்பர் 2025. ,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குள்ள ஒரு குடையை வைத்துக்கொண்டு எப்படி படிக்கிறாங்கன்னு பாருங்க. மழைக்காலத்தில் பள்ளிக்கூடத்துக்குள்ள குடையை வச்சுக்கிட்டு குழந்தைகள் எப்படி படிக்கிறாங்கன்னு கேளுங்கள். இதைப்பத்தி பேசினீங்கன்னா திராவிட மாடல் அரசு நம்பர் ஒன்னு எனக்கு கூரை இடிஞ்சு தலை மேல விழுது நம்பர் ஒன்னுங்களா? அடுத்து திருவள்ளூர் மாவட்டம் செவ்வாநூர்ல பாருங்க. பள்ளிக்கூடத்தினுடைய மேற்கூரை விழுந்து குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை அங்கே ஏற்படுத்தி இருக்கின்றார்கள்னு பாருங்க. அருமை, அதே போல புதுக்கோட்டை மாவட்டத்திலே பள்ளி கட்டடமே இல்லாதனால குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்து எப்படி படிக்கிறாங்கன்னு பாருங்க. மரத்தடியில் உட்கார்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலே மரத்துக்கு கீழ. அமைச்சருடைய சொந்த மாவட்டத்திலே அரசு பள்ளிகளுடைய சுவர் இல்லை, கூரை இல்லை. குழந்தைகள் எல்லாம் தரையில உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதையும் நீங்கள் பாருங்கள். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில ஒரு அரசு பள்ளியினுடைய மேற்கூரை விழுந்து எப்படி உடைஞ்சிருக்குன்னு பாருங்க. பொள்ளாச்சி மாவட்டம் ஆனைமலையில பள்ளியினுடைய வகுப்பறைகள் எப்படி இருக்குது? மழை பெய்து தண்ணி அங்கு தண்ணிக்குள்ள பெஞ்சு போட்டு குழந்தைகள் உட்கார்ந்திருக்கின்றார்கள். இந்த மாதிரி நான் காட்டிக்கிட்டே போவேன். 

இந்த மாதிரி போட்டோ மட்டுமே 36 போட்டோ கொண்டு வந்திருக்கிறேன். 36 போட்டோ இந்த ஆல்பத்தில. காட்டிக்கிட்டே போனா உங்களுக்கு நேரம் இல்லைப்பா. ரொம்ப நேரமா நீங்க எல்லாம் நிற்கிறீர்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக என்ன சாதனையை இவர் செய்தார்? இல்ல நம்முடைய திருவெறும்பூர் தொகுதிக்குத்தான் ஏதாவது சாதனை செய்தார்களா? பள்ளிக்கல்வித் துறையில ஆசிரியர்களுக்கு கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் ஏமாற்றியது மட்டும் பாருங்கள். வாக்குறுதி 311 சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம், இல்லை. வாக்குறுதி 181 பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்கள் 11,000 ஹெட்மாஸ்டர் பதவி தமிழகத்திலே காலியா இருக்கு.

இந்த தொகுதி கொடுத்ததுதான் பண்ணார்களா? இந்த தொகுதிக்குத்தான் எத்தனை முறை திரும்பத் திரும்ப நம்முடைய திருவெறும்பூருக்கு சொன்னார். 

இந்த தொகுதியில் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கை வேற இடத்துக்கு மாற்றுவோம். என்ன அங்க? அங்க திருச்சி மாநகரத்தினுடைய இதயமாக இருக்கக்கூடிய பகுதி ஒன்னுல. மலைக்கோட்டை எந்த அளவுக்கு உயரமோ அதைவிட உயரமாக நம்மளுடைய திருச்சியில குப்பை கிடங்கு எங்கய்யா இருக்குது? அரியமங்கலம் அம்பிகாபுரத்தில இருக்கு. மலைக்கோட்டையை தாண்டிடுவானுங்க குப்பையை கொட்டுவதில், மலைக்கோட்டையை தாண்டி மேல ஆயிட்டு போயிடுறீங்க.

அதேபோல பால்பண்ணை துவாக்குடியிலிருந்து பால்பண்ணைக்கு அந்த அணுகு சாலையை அமைப்போம். அதும் பண்ணல. 2021 தேர்தல்ல மிக முக்கியமா உங்களுக்கு சொன்னாங்க நாங்க ஆட்சிக்கு வந்தால் உயர்மட்ட பாலம் கட்டுவோம் என்று. அதையும் செய்யல.

பொய்யை சொல்லி சொல்லி சொல்லி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யல. தமிழகத்தினுடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் எதுவும் செய்யல. இவரு தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்து யாருக்கு என்ன பிரயோஜனம்? 

 நீங்களே சொல்லுங்கள். ஆனால் நம்முடைய சகோதரர் குமார் நம்முடைய வெற்றி வேட்பாளராக நின்று கொண்டிருக்கிறார். குமார் ஒரு எளிய மனிதர். உங்களுக்காக பணி செய்யக்கூடியவர். 

அதிமுக 2021-ல இங்கு சட்டமன்றத்தில் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றாலும் கூட உண்மையாலும் இவர்தான் சட்டமன்ற உறுப்பினராக உங்களுக்கு ஓடோடி வேலை செஞ்சுட்டு இருக்கிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவே மாட்டார். 

சென்னையில் இருப்பார். பாடல் வெளியிட்டு விழா முதலாலாக போவார். உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த பக்கம் அந்த பக்கம் இருப்பார். தொகுதி மக்களுடைய பிரச்சனை என்று சொன்னால் எப்பொழுதும் வராத ஒரு மனிதருக்கு இந்த முறை நாம் கண்டிப்பாக வாக்களித்து வெற்றி பெற வைக்கக்கூடாது. 

 சகோதரிகளே தாய்மார்களே நீங்க சொல்றீங்க தமிழகத்தில போதைப்பொருள் அதிகமாயிடுச்சுன்னு.

ஒரு கணக்கு நான் சொல்றேன் தயவு செய்து நீங்கள் கேளுங்கள். நமக்கு தெரியும் சர்வதேச போதைப்பொருளுடைய கஞ்சா கடத்தல் கும்பல் தலைவன் யாருன்னு தெரியும் ஜாஃபர் சாதிக். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு பொறுப்பில் இருக்கக்கூடிய ஜாஃபர் சாதிக். இந்த போதை மருந்து வித்தீங்கன்னா மக்கள் யாரும் கிரெடிட் கார்டுல ஏடிஎம்ல பணம் கொடுக்க மாட்டார்கள். கையில இருந்தா காசு கொடுப்பார் இல்லைங்களா? அந்த கருப்பு பணத்தை எப்படி வெள்ளையாக்கிறாங்க ஜாஃபர் சாதிக்? அன்பில் மகேஷ் பொய்யாமொழியோடு இணைந்துதான் போதை பொருளில் வரக்கூடிய கருப்பை வெள்ளையாக்கிறார்கள். நான் சும்மா பேசமாட்டேன் மைக்ல. சும்மா பேசமாட்டேன் ஆதாரத்தை கொடுக்கிறேன்.

நம்முடைய ஜாஃபர் சாதிக் ஒரு கம்பெனி நடத்துறாரு கோலேசன்ஸ் வெஞ்சர்ன்னு ஒரு கம்பெனி நடத்துறாரு. தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தோடு ஒப்பந்தம் அவருக்கு போடுகிறார்கள். ஜாஃபர் சாதிக்கினுடைய கஞ்சா கடத்தல் மன்னனுடைய ஒரு நிறுவனம் கொலேசன் வெஞ்சர்ஸ் தமிழ்நாடு பாட களகத்தினுடைய ஒப்பந்தக்காரர் ஸ்ரீ அப்பு டைரக்ட் அவர்களோடு ஒப்பந்தம் போட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ஜாஃபர் சாதிக்கினுடைய கம்பெனி பாடநூல் கொடுத்திருக்கிறார்.

நீங்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பத்தி சாதாரணமா நினைச்சிடாதீங்க, சாதாரணமான மனுஷன் கிடையாது. சாதாரணமான ஆள் கிடையாது. நேரடியாக ஜாஃபர் சாதிக்கோடு தொடர்பில் அவருடைய நிறுவனம் தமிழ்நாடு பாடநூல் கழகத்தோடு தொடர்பு. இது மட்டுமல்ல 2022-23 காலகட்டத்தில இந்த முதலீடுகளை அமலாக்கத்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டு டைய கதவ ஈடி தட்டுனா நீங்களும் பொறுப்பல்ல. நானும் பொறுப்பல்ல. அதுக்கு ஜாஃபர் சாதிக்குத்தான் பொறுப்பு என்பது உங்களுக்கு தெரியும்.

இவங்க சாதாரண ஆட்கள் கிடையாது. எல்லா இடத்தில கூட டீல போட்டு வைத்திருக்கிறார்கள். நான் இரண்டாண்டுகளுக்கு முன்பு சொன்னேன் நோபல் ஸ்டீல்னு ஒரு நிறுவனம் அதுல அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு பங்குதாரராக அந்த நிறுவனத்தில் இருக்கிறார். 

அந்த நிறுவனத்திலிருந்து 1000 கோடி ரூபாய் துபாயிலிருந்து அந்த நிறுவனத்துக்கு பணம் வருது, நான் கேட்டேன் 1000 கோடி எப்படி வருதுன்னு. அவங்க சொன்னாங்க எங்களுக்கு சொந்தமல்ல அண்ணனுக்கு சொந்தமல்ல என்று எனக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்புனாங்க அந்த கம்பெனியிலிருந்து.

அருமை சொந்தங்களே இன்னைக்கு நீங்கள் பாருங்கள். இந்த ஆச்சரியம் என்னன்னு பாருங்கள். உதயநிதி ஸ்டாலின் பேர்ல ஒரு அறக்கட்டளை இருக்கு சென்னையில. அந்த அறக்கட்டளையினுடைய அட்ரஸ் 53/22 சரவணா தெரு கேஜி நாகராஜா பேலஸ் டீநகர் சென்னை 17. இந்த நோபல் கம்பெனியினுடைய அட்ரஸும் 53/22 சரவணா தெரு கேஜி நாகராஜா பேலஸ் டீநகர் சென்னை 17. இந்த ஆச்சரியத்தை எங்கயாச்சும் பார்ப்பீர்களா? நான் 1000 கோடி ரூபாய் வருமானம் தவறாக வருகிறது என்று குற்றம் சாட்டிய நிறுவனமும் உதயநிதி ஸ்டாலினுடைய அறக்கட்டளையும் ஒரே பில்டிங் ஒரே ஆபீஸ் ஒரே டோர் நம்பர். அதனால தயவுசெய்து இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நல்லவன் மட்டும் தயவுசெஞ்சு நினைச்சிடாதீங்க. நான் யாரையும் குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் களத்தில் குற்றம் சாட்டல. ஆனால் நல்லவர் நீங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து அந்த தவறு செய்யக்கூடாது என்பதற்காக இதை நான் சொல்கிறேன்

அதனால் நம்முடைய சகோதரர் குமார் இந்த முறை நீங்கள் நம்முடைய அதிமுக தலைமையில் இருக்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நம்முடைய வெற்றி வேட்பாளராக இருக்கிறார். அவர்களை நீங்கள் விட்டுக்கொடுக்காமல் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் ஓட்டு போடுங்கள்.

அதே நேரத்தில் இளைஞர்களே அரசியல் கொஞ்சம் அனுபவம் வேண்டும். இளைஞர்கள் யாரும் தப்பா நினைச்சிடக்கூடாது. நீங்க எல்லாம் மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு இளைஞர்கள் சொல்லுங்கள். திமுகவிடமிருந்து மாற்றம் வேண்டும் என்றால் அரசு ஆட்சி செய்ய தெரிந்த ஒரு கட்சி ஆட்சியில் உட்கார்ந்தாத்தான் மாற்றம். அதனால் இளைஞர் பெருமக்களே இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த முறை உங்கள் அன்பை எல்லாம் எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கின்றார்.

 ஒரு தொகுதிக்கு எப்படின்னு தெரியும். ஒரு எம் எல் ஏ வா யாராச்சும் வந்தா எப்படி ஃபைல் பாக்கணும்னாலும் தெரியணுமே. ஒரு மாசாங்க அதிகாரிட்ட எப்படி பேசணும்னாலும் தெரியணும்ங்க. ஒரு அலுவலகத்தில் போய் எப்படி வேலை வாங்கணும்னாலும் தெரியணுமே. அது தெரியாதவங்க எப்படி எம் எல் ஏ வா வந்து உங்களுக்கு தண்ணி கொடுப்பார்கள், ரேஷன் கார்டு கொடுப்பார்கள், ஆதார் அட்டையை கொடுப்பார்கள். அதனால் நீங்கள் மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் அந்த மாற்றத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக திருவெறும்பூர்ல இரட்டை இலை சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டேன். 

இந்த முறை தவறவிடாமல் நம்முடைய அண்ணன் குமாருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் அவருக்கு நீங்கள் முழு ஆதரவும் தெரிவித்து திருவெறும்பூர்ல அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் நம்முடைய வெற்றிச் சின்னம் இரட்டை இலை என்பதை மறந்துவிடாதீர்கள். ஏப்ரல் 23 ஆம் தேதி அந்த வாய்ப்பை சகோதரர் குமார்க்கு கொடுக்கணும்.

 உங்களுடைய சட்டமன்ற உறுப்பினராக திருவெறும்பூரினுடைய குரலாக அனுப்பி வையுங்கள். இந்த எலக்ஷன்ல திருச்சியை பொறுத்தவரை ஒரு ஒரு வாக்கும் நமக்கு முக்கியம் என்பதை புரிந்து கொண்டு சகோதரர் குமார் அவர்களோடு நீங்கள் இருக்க வேண்டும் என பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0