தொகுதி மறுவரையறை மசோதா; கருப்புக் கொடி ஏற்றி போராடிய அமைச்சர்கள்
தொகுதி மறுவரையறை மசோதா; கருப்புக் கொடி ஏற்றி போராடிய அமைச்சர்கள்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் திருச்சியில் அமைச்சர்கள் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்பேரில் மாநிலம் முழுவதும் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டியும், கோலமிட்டும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சியில் பிரசார களத்துக்கு வந்த திமுக முதன்மைச் செயலாளரும் மேற்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சர் கே. என்.நேரு கருப்பு சட்டை அணிந்து வாக்கு சேகரித்தார். பின்னர், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றி மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0